செய்திகள் மலேசியா
பெர்கேசோவின் மெகா iLINDUNGu திருவிழா: 2,000த்திற்க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குகிறது
கோலாலம்பூர்:
பெர்கேசோவின் மெகா iLINDUNGu திருவிழா கிட்டத்தட்ட 2,000த்திற்க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குகிறது என்று பெர்கேசோ அறிக்கையில் கூறியது.
பெர்கேசோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா கோத்தா டாமன்சாராவில் உள்ள ஸ்ட்ராண்ட் மாலில் நாளை செப்டம்பர் 18 முதல் 20 வரை, காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.
MYFutureJobs மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லிண்டுங் கெர்ஜயா திருவிழாவில், வேலை தேடுபவர்களுக்கு 2,000-க்கும் மேற்பட்ட காலியிடங்களை வழங்கும் 25 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
வேலை வாய்ப்புகளுடன், வேலை தேடுபவர்கள் தங்கள் சுயவிவரங்களைத் தயாரிப்பது குறித்த வழிகாட்டுதலையும் பெறலாம்.
எனவே, இந்த முன்னெடுப்பானது, வேலை தேடும் பார்வையாளர்கள் வேலையளிப்பவர்களுடன் நேரடியாக உரையாடவும், காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த தகவல்களைப் பெறவும், ஆட்சேர்ப்பு அமர்வில் கலந்துகொள்வதற்கு முன்பு தங்களைத் தயார்படுத்திக்கொள்ளவும் ஒரு தளத்தை வழங்குகிறது.
மெகா iLINDUNGu விழாவின் இந்த மூன்றாவது பதிப்பு, சமூகப் பாதுகாப்பு சேவைகளை சமூகத்திற்கு நெருக்கமாகக் கொண்டுவருவதில் ஒரு விரிவான அணுகுமுறையைக் கொண்டுவருகிறது.
மேலும், இந்த விழா மனிதவள அமைச்சின் கீழ் உள்ள HRD Corp, TalentCorp, NIOSH, PTPK, MITRA உள்ளிட்ட 11 பிற நிறுவனங்கள் ஒன்றிணையவுள்ளன.
பல்வேறு முகமைகளின் பங்கேற்பு, பார்வையாளர்கள் வேலை வாய்ப்புகள், திறன் மேம்பாடு, பணியாளர் நலன் மற்றும் பல்வேறு அரசு சேவைகள் குறித்த தகவல்களை ஒரே இடத்தில் பெற அனுமதிக்கிறது.
தொழில் வாய்ப்பு அம்சத்துடன் கூடுதலாக, மெகா ஐ லிண்டுங் யு விழா, இலவச சுகாதாரப் பரிசோதனைகள், பங்களிப்புச் சரிபார்ப்புகள், நலன்கள் குறித்த ஆலோசனை சேவைகள், பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பெர்கேசோ சேவைகளையும் நேரடியாக வழங்குகிறது.
பார்வையாளர்கள் ஒரு மோட்டார் சைக்கிளைப் பெரும் பரிசாகக் கொண்ட அதிர்ஷ்டக் குலுக்கலில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.
அதே நேரத்தில், 500க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் தங்கள் ஹெல்மெட்டுகளில் ஒட்டிக்கொள்வதற்காக, சமூகப் பாதுகாப்பு முன்னெடுப்புகளைக் கொண்ட சிறப்பு ஸ்டிக்கர்களைப் பெறுவார்கள்.
60,000 பார்வையாளர்களை இலக்காகக் கொண் இந்த விழாவை மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தொடங்கி வைப்பார் என பெர்கேசோ கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2026, 12:28 pm
பூச்சோங் தொழிற்துறை பூங்காவில் பயங்கர தீ விபத்து: நான்கு தொழிற்சாலைகள் நாசமானது
September 17, 2026, 12:20 pm
இன்னும் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை மட்டுமே: அப்துல் ரவுஃப்
September 17, 2026, 12:19 pm
பிறையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 14 வயது சிறுவன் மீது காவல்துறை விசாரணை
September 17, 2026, 12:19 pm
பாலியில் ஸ்கூபா டைவிங் செய்தபோது மலேசியர் உயிரிழந்தார்
September 17, 2026, 12:18 pm
சபா, சரவாக் தலைவர்களிடமிருந்து நட்பை கற்றுக் கொள்ளுங்கள்: ஜாஹித் முன்னிலையில் அன்வார் கூறினார்
September 17, 2026, 12:17 pm
16ஆவது பொதுத் தேர்தல் அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களில் நடைபெறலாம்?: மசீச
September 17, 2026, 12:17 pm
நகைக் கடையில் இரண்டாவது முறையாகக் கொள்ளை: 1 மில்லியன் ரிங்கிட் இழப்பு என மதிப்பிடப்பட்டுள்ளது
September 17, 2026, 11:36 am
