நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் YANG DI PERTUAN BESAR பதவியிலிருந்து துவாங்கு முஹ்ரிஸை நீக்கும் ஆவணம்: மந்திரி பெசார் உறுதி 

சிரம்பான்: 

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் பொறுப்பிலிருந்து துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் நீக்கப்படும் ஆவண பிரகடனம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் கூறினார். 

இது தொடர்பான விவகாரம் குறித்து மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் ஆழமாக விவாதிக்கப்பட்டு, முழுமையான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பிரகடனத்தை அரசிதழில் வெளியிடும் நடைமுறைகளைத் தொடங்குமாறு மாநிலச் செயலாளருக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். 

இதற்கு முன்னதாக, கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மந்திரி பெசார் தலைமையில் நடைபெற்ற இந்த அவசரக் கூட்டத்தில், துங்கு நட்சாருதீன் துங்கு ஜாபார் புதிய ஆட்சியாளராக உடனடியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், மாநில அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சாடிய DKU செயலாளர் ராஜா நோரஸ்லி, இந்த மாநில அரசின் தீர்மானத்தை உடனடியாக மறுத்துள்ளார். 

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சட்டப்பூர்வமான ஆட்சியாளர் TUANKU MUHRIZ TUANKU MUNAWIR தான் என்று அவர் திட்டவட்டமாக சொன்னார் 

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று, நான்கு சட்டத்துறைத் தலைவர்கள் முன்னிலையில் துங்கு முஹ்ரிஸை நீக்குவதற்கான பிரகடன ஆவணம் கையெழுத்திடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின.

மந்திரி பெசாரின் கையெழுத்துடன் வெளியான இந்த ஆவணம் மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset