செய்திகள் மலேசியா
அரசாங்கம் மின்சார மானியப் பாதுகாப்பு அளவை ஒரு யூனிட் மின்சாரம் 600லிருந்து 800ஆக உயர்த்துகிறது
புத்ராஜெயா:
மடானி அரசாங்கம் இன்று, மாதத்திற்கு ஒரு யூனிட் மின்சாரம் 600லிருந்து 800 ஆகப் பாதுகாப்பு அளவை விரிவுபடுத்துவதன் மூலம் மின் கட்டண மானியங்களை மேம்படுத்த முடிவு செய்துள்ளது.
செப்டம்பர் முதல் டிசம்பர் 31, 2026 வரையிலான மின்சாரப் பயன்பாட்டிற்கு இது நடைமுறைக்கு வரும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மக்களின் வாழ்க்கையில் தற்போது நிலவும் அழுத்தங்களைக் கையாள்வதற்கான உடனடி நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், மாதத்திற்கு 800 கிலோவாட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு உபயோக நுகர்வோருக்கு, தானியங்கி எரிபொருள் செலவு சரிசெய்தல், சில்லறைக் கட்டணங்கள், விற்பனை, சேவை வரி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அவர் இன்று மாலை முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் முன்னதாக தனது அலுவலகத்தில், எரிசக்தி ஆணையம், எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்ற அமைச்சு, தெனாகா நேஷனல் பெர்ஹாட் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான ஒரு கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2026, 10:56 pm
நஜிப்பின் பொது மன்னிப்பு விவகாரம்: கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் நாளை விவாதிக்கும்?
September 17, 2026, 10:56 pm
டாவ்லாட் துவாங்கு, துரோகிகளைப் பிடியுங்கள் என்ற கோஷங்களுடன் துவாங்கு முஹ்ரிஸை வரவேற்க 100 பேர் கேஎல்ஐஏவில் கூடினர்
September 17, 2026, 10:54 pm
கும்பல் முறியடிப்பு; 35 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல்: ஹுசைன் ஒமார் கான்
September 17, 2026, 9:50 pm
எப்ஏஎம் தலைவராக டத்தோ அப்துல் கனி தேர்வு: டத்தோ சேரன் உதவித் தலைவரானார்
September 17, 2026, 5:48 pm
சிலாங்கூர் சிறுவர் பாடல் திறன் போட்டி; சிறுவர்களின் திறனை வெளிப்படுத்த மேடை அமைத்து தரும்: டாக்டர் குணராஜ்
September 17, 2026, 4:15 pm
டத்தின்ஶ்ரீ ரொஸ்மா மன்சோர் ஊழல் வழக்கு: கூடுதல் சாட்சியப் பதிவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை
September 17, 2026, 12:49 pm
