செய்திகள் மலேசியா
எப்ஏஎம் தலைவராக டத்தோ அப்துல் கனி தேர்வு: டத்தோ சேரன் உதவித் தலைவரானார்
பெட்டாலிங்ஜெயா:
எப்ஏஎம் தலைவராக டத்தோ அப்துல் கனி தேர்வு பெற்ற வேளையில் டத்தோ சேரன் உதவித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
எப்ஏஎம் எனப்படும் மலேசிய கால்பந்து சங்கத்தின் ஆண்டுக் கூட்டமும் புதிய நிர்வாக குழு தேர்தலும் இன்று நடைபெற்றது.
இத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, டத்தோ அப்துல் கனி ஹசான் சங்கத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாட்டின் கால்பந்து நிர்வாக அமைப்பின் உயர் பதவிக்காக இருமுனைப் போட்டி நிலவிய இத்தேர்தலில், அப்துல் கனி 20 வாக்குகளையும், அவரது போட்டியாளரான டத்தோஸ்ரீ ஷாரில் மொக்தார் வெறும் ஐந்து வாக்குகளையும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம், கால்பந்து நிர்வாகத்தில் ஈடுபடுவதற்கு முன்பு முன்னாள் வீரராக இருந்த பின்னணியைக் கொண்ட அப்துல் கனி, 2025-2029 பதவிக்காலத்தின் எஞ்சிய காலத்திற்கு எம்ஏஎம்மின் உயர் பதவியை வகிக்கிறார்.
சங்கத்தின் முதல் உதவித் தலைவராக டத்தோஸ்ரீ ரோஸ்மாடி இஸ்மாயில் தேர்வு செய்யப்பட்டார்.
அதே வேளையில் கால்பந்து துறையில் பரந்த அனுபவம் கொண்ட டத்தோ சேரன் நடராஜா சங்கத்தின் மூன்றாவது உதவித் தலைவராக வெற்றி பெற்றார்.
முகமத் அஜிசுடின், டத்தோ முகமத் அசார் பின் ஜமாலுடின், டத்தோ அலிஜஸ், டத்தோ கமாருடின், டத்தோ சையத் மஹாடி பின் சையத் ஹாசன், டத்தோ ஜைனால் அபிடின் ஹடான், டத்தோ சுராயா ஆகியோர் மத்திய செயலவை உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2026, 10:56 pm
நஜிப்பின் பொது மன்னிப்பு விவகாரம்: கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் நாளை விவாதிக்கும்?
September 17, 2026, 10:56 pm
டாவ்லாட் துவாங்கு, துரோகிகளைப் பிடியுங்கள் என்ற கோஷங்களுடன் துவாங்கு முஹ்ரிஸை வரவேற்க 100 பேர் கேஎல்ஐஏவில் கூடினர்
September 17, 2026, 10:55 pm
அரசாங்கம் மின்சார மானியப் பாதுகாப்பு அளவை ஒரு யூனிட் மின்சாரம் 600லிருந்து 800ஆக உயர்த்துகிறது
September 17, 2026, 10:54 pm
கும்பல் முறியடிப்பு; 35 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல்: ஹுசைன் ஒமார் கான்
September 17, 2026, 5:48 pm
சிலாங்கூர் சிறுவர் பாடல் திறன் போட்டி; சிறுவர்களின் திறனை வெளிப்படுத்த மேடை அமைத்து தரும்: டாக்டர் குணராஜ்
September 17, 2026, 4:15 pm
டத்தின்ஶ்ரீ ரொஸ்மா மன்சோர் ஊழல் வழக்கு: கூடுதல் சாட்சியப் பதிவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை
September 17, 2026, 12:49 pm
