நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துவாங்கு முஹ்ரிஸை ஏற்காவிட்டால் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்: DAP பொதுச்செயலாளர் அந்தோனி லோக் கருத்து 

சிரம்பான்: 

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீரை ஏற்காவிட்டால் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்ய  வேண்டும் என்று DAP கட்சியின் பொதுச்செயலாளர் அந்தோனி லோக் கூறினார். 

கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் மாநில எக்சோ உறுப்பினர்கள் துவாங்கு முஹிரிஸ் முன்னிலையில் தங்களது பதவிப் பிரமாணங்களை ஏற்றுக்கொண்டனர்.

ஒருவேளை அவர்கள் அவரை ஆட்சியாளராக  ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நெறிமுறை மற்றும் சுயமரியாதை அடிப்படையில் தங்களது பதவிகளைத் துறப்பதே சரியானதாகும்.

மாநிலத்தின் ஆட்சியாளர் பதவி தொடர்பில் சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் அவர்கள் சட்ட விதிகளையும் தங்களது அதிகாரத்தின் மூலத்தையும் சரியாகப் படித்தறிந்து புரிந்திருக்க வேண்டும்.

முன்னதாக, துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் YANG DI PERTUAN BESAR பொறுப்பிலிருந்து அகற்றப்படுவதாகவும் அவருக்கு பதிலாக துவாங்கு நாசாருதீன் துவாங்கு ஜாஃபார் நியமிக்கப்பட்டுள்ளார் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஊடக அறிக்கையை ஒன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset