செய்திகள் மலேசியா
சிலாங்கூர் சிறுவர் பாடல் திறன் போட்டி; சிறுவர்களின் திறனை வெளிப்படுத்த மேடை அமைத்து தரும்: டாக்டர் குணராஜ்
கிள்ளான்:
சிறுவர்களின் திறனை வெளிப்படுத்த மேடை அமைத்து தரும் நோக்கில் சிலாங்கூர் மாநில பாடல் திறன் போட்டி நடத்தப்படுகிறது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குண்ராஜ் இதனை கூறினார்.
தமிழ் கலைஞர்கள் மன்றம், கிள்ளான் வின்வெளி கலை மன்றம், சிலாங்கூர் பாரம்பரிய இசை வாத்திய சங்கம் ஆகியவற்றின் கூட்டமைப்பில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியின் தொடக்க சுற்றுகள் அக்டோபர் 10,11ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
அரையிறுதி சுற்று அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதன் பிரமாண்ட இறுதி சுற்று வரும் அக்டோபர் 31ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்திய சிறார்களை இசை, பாடல் துறையில் சாதிக்க வேண்டும் என இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக இத்துறைகளில் சிறார்களை ஊக்குவிக்க வேண்டும் எனபது அதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 15 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.
கடந்தாண்டு போட்டியில் கிட்டத்தட்ட 165 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவ்வாண்டும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நாடு முழுவதும் இருந்து போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஆகவே ஆர்வமுள்ள சிறார்கள் விரைந்து வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவுக்கான இறுதி நாள் அக்டோபர் 8ஆம் தேதி என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக தங்களிம் பங்கேற்பை பதிவு செய்து கொள்ள வேண்டும் என குணராஜ் கேட்டுக் கொண்டார்.
தொடர்புக்கு: தீனா 011-39139589, மேரி 012-2823002
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2026, 4:15 pm
டத்தின்ஶ்ரீ ரொஸ்மா மன்சோர் ஊழல் வழக்கு: கூடுதல் சாட்சியப் பதிவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை
September 17, 2026, 12:49 pm
பெர்கேசோவின் மெகா iLINDUNGu திருவிழா: 2,000த்திற்க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குகிறது
September 17, 2026, 12:28 pm
பூச்சோங் தொழிற்துறை பூங்காவில் பயங்கர தீ விபத்து: நான்கு தொழிற்சாலைகள் நாசமானது
September 17, 2026, 12:20 pm
இன்னும் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை மட்டுமே: அப்துல் ரவுஃப்
September 17, 2026, 12:19 pm
பிறையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 14 வயது சிறுவன் மீது காவல்துறை விசாரணை
September 17, 2026, 12:19 pm
பாலியில் ஸ்கூபா டைவிங் செய்தபோது மலேசியர் உயிரிழந்தார்
September 17, 2026, 12:18 pm
