நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டாவ்லாட் துவாங்கு, துரோகிகளைப் பிடியுங்கள் என்ற கோஷங்களுடன் துவாங்கு முஹ்ரிஸை வரவேற்க 100 பேர் கேஎல்ஐஏவில் கூடினர்

சிப்பாங்:

நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்டுவான் பெசார், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் வருகைக்காகக் காத்திருக்க கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1 இல் உள்ள பிரமுகர்கள் வரவேற்பு வாசலுக்கு முன் சுமார் 100 ஆதரவாளர்கள் கூடினர்.

அங்கிருந்த ஆதரவாளர்களில் பெரும்பான்மையானவர்கள் கறுப்பு உடையில் காணப்பட்டனர்.

பல ஆண் ஆதரவாளர்கள் பாஜு மெலாயு, சொங்கோக் அணிந்திருந்தனர்.

பதாகைகளை ஏந்தியவர்களில் சிலர் டாவ்லாட் துவாங்கு, துரோகியைப் பிடியுங்கள் என ஆதரவு வாசகங்களையும் முழக்கமிட்டனர்.

துவாங்கு முஹ்ரிஸின் மகன், துங்கு பெசார் ஸ்ரீ மெனந்தி, துங்கு டத்தோஸ்ரீ அலி ரெதாவுதீனும், ஆதரவாளர்களுடன் அவரது தந்தையின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

முன்னதாக, துவாங்கு முஹ்ரிஸ் நெகிரி செம்பிலானின் யாங் டிபெர்டுவான் பெசார் பதவியைச் சுற்றியுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவைக் காட்ட இன்று இரவு ஒரு கூட்டம் நடைபெற்றது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset