நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கும்பல் முறியடிப்பு; 35 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல்: ஹுசைன் ஒமார் கான்

கோலாலம்பூர்:

கடந்த செப்டம்பர் 10 அன்று கிள்ளான் பள்ளத்தாக்கில் நடத்தப்பட்ட ஆறு சோதனைகளில், இரண்டு வெளிநாட்டினரால் வழிநடத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல், பதப்படுத்தும் கும்பலை போலிஸ் முறியடித்தது.

இதில் 35.24 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அம்பாங், பெட்டாலிங், கெப்போங், பிரிக்பீல்ட்ஸ், சுபாங் ஜெயா, சிப்பாங் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் 25 முதல் 48 வயதுக்குட்பட்ட ஆறு உள்ளூர் ஆண்கள், இரண்டு வெளிநாட்டு ஆண்கள் மற்றும் மூன்று வெளிநாட்டுப் பெண்கள் உட்பட 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் தெரிவித்தார்.

முறையே ஆஸ்திரேலிய, கனடா கடப்பிதழ்களைக் கொண்டுள்ள அந்த இரண்டு வெளிநாட்டினரும், ஜனவரி மாதம் முதல் செயல்பட்டு வந்த இந்தக் கும்பலின் மூளையாகவும் வேதியியலாளர்களாகவும் நம்பப்படுவதாக அவர் கூறினார்.

இந்தக் கும்பல் அம்பாங்கில் வாடகைக்கு எடுத்த ஒரு பங்களாவை போதைப்பொருள் பதப்படுத்தும் ஆய்வகமாக மாற்றியுள்ளது.

சுபாங் ஜெயாவில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு போதைப்பொருள் பதப்படுத்தும் உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த வளாகம் ஒரு போதைப்பொருள் ஆய்வகமாகப் பயன்படுத்தத் தயாராகி வருவதாக நம்பப்படுகிறது என்று அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில் 344.89 கிலோ மெத்தம்பெட்டமைன் தூள், 347.15 லிட்டர் மெத்தம்பெட்டமைன் திரவம், 3.84 கிலோ எம்.டி.எம்.ஏ தூள், 630 கிராம் எராமின் 5 மாத்திரைகள், 20 கிராம் கஞ்சா ஆகியவை அடங்கும்.

இவை மூன்று மில்லியன் பயனர்களுக்கு விநியோகிக்கப் போதுமானவை என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஹுசைன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset