நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தின்ஶ்ரீ ரொஸ்மா மன்சோர் ஊழல் வழக்கு: கூடுதல் சாட்சியப் பதிவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை 

கோலாலம்பூர்: 

டத்தின்ஶ்ரீ ரொஸ்மா மன்சோரின் 1.25 பில்லியன் ரிங்கிட் ஊழல் 
வழக்கில்  கூடுதல் சாட்சியங்களை நீதிமன்றத்தில் பதிவு செய்வதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நீதியரசர் Azhahari Kamal Ramli தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இரு தரப்பினரும் மேற்கொண்ட கலந்தாலோசனைக்குப் பிறகு தரப்பு வழக்கறிஞர்கள் இந்தத் தடைக்கு ஒப்புதல் அளித்தனர்.

கூடுதல் சாட்சியாக உள்ள Rayyan Radzwill Abdullah-இன் வாக்குமூலத்தை உயர் நீதிமன்றம் இன்று பதிவு செய்யவிருந்தது. எனினும், கூட்டரசு  நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுத் தரப்பு தாக்கல் செய்யும் மேல்முறையீடு முடியும் வரை இந்த நடவடிக்கை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கூட்டரசு நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பு உறுதியளித்துள்ளது.

அனைத்துத் தரப்பினரின் நலனுக்காகவும் இந்த விவகாரம் விரைவாக விசாரிக்கப்பட்டு முடிக்கப்பட வேண்டும் என்று தற்காப்புத் தரப்பு தெரிவித்தது.

முன்னதாக, வழக்கின் போது சாட்சியளித்த ரியாட் மீது முறையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக ரோஸ்மா தரப்பு புதிய ஆதாரங்களைச் சமர்ப்பித்தது.

போலீஸ் அறிக்கையுடன் கூடிய அந்தச் சட்டப்பூர்வ உறுதிமொழி ஆவணங்களை நீதிமன்றம் ஏற்க வேண்டும் என்று ரோஸ்மா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட நிலைமை குறித்த விபரங்களை உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இது தொடர்பான வழக்கு மேலாண்மைக்காக அக்டோபர் 7-ஆம் தேதியை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset