செய்திகள் உலகம்
வானிலிருந்து செய்திக்காக படம் பிடித்துக் கொண்டிருந்த NBC செய்தி நிறுவன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: மூவர் மரணம்
லாஸ் ஏஞ்சலஸ்:
அமெரிக்காவில் NBC செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது மூவர் மாண்டனர்.
காயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
குறைந்தது இருவரைப் பலிவாங்கிய பேருந்து விபத்தை அந்த ஹெலிகாப்டர் வானில் பறந்தபடி படமெடுத்துக்கொண்டிருந்தது.
பிறகு பொருள்களைச் சேகரித்து வைக்கும் கிடங்கிற்கு அருகில் அது விழுந்து நொறுங்கியது.
அங்கிருந்த மற்ற வாகனங்களுக்கும் கொள்கலன்களுக்கும் தீ பரவுவதைத் தடுக்கத் தீயணைப்பாளர்கள் அரும்பாடுபட்டனர்.
NBC4 செய்தி நிறுவனத்தின் NewsChopper 4 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது பின்னர் உறுதிசெய்யப்பட்டது.
அதிலிருந்த செய்தியாளர் எலியானா மொரேனோ (Eliana Moreno), விமானி ஜார்ஜ் மார்சினிவ் (George Marciniw) மாண்டதை NBC4 தெரிவித்தது. மூன்றாவது நபர், ஹெலிகாப்டர் விழுந்தபோது தரையில் இருந்த பாதசாரி எனத் தெரிய வந்துள்ளது.
ஹெலிகாப்டர் இரண்டு வர்த்தகக் கட்டடங்களுக்கு இடையே விழுந்ததாக லாஸ் ஏஞ்சலிஸ் தீயணைப்புத் துறை கூறியது. நான்கு வாகனங்களும் இரண்டு சரக்குப் பெட்டகங்களும் சேதமடைந்தன.
மேலும் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவரது உடல்நிலை குறித்த விவரம் தெரியவில்லை.
விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அமெரிக்கத் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்துகிறது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 10:30 pm
சிங்கப்பூரில் 10,000க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப்களில் ஊடுருவி SMS அனுப்பிய ஆடவருக்குச் சிறை
September 15, 2026, 10:22 pm
ஏமன் உள்நாட்டுப் பூசல்: வாழ வழிதேடி இடம்பெயரும் மக்கள்
September 15, 2026, 10:17 pm
இன்றுமுதல் தாய்லாந்தில் விசா இல்லாத பயணம்: இனி ஒரு மாதம் மட்டுமே
September 15, 2026, 10:44 am
4,000க்கும் மேற்பட்ட வங்காளதேச நாட்டவர்களின் விசாக்களைத் திடீரென்று இரத்து செய்தது ஐக்கிய அரபு அமீரகம்
September 14, 2026, 1:16 pm
மீன்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்: சிசிடிவி ஆதாரத்துடன் கைது செய்த காவல்துறை
September 13, 2026, 8:03 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் முன்னிலையில் நசீர் கனிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
September 12, 2026, 10:43 pm
