நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இன்றுமுதல் தாய்லாந்தில் விசா இல்லாத பயணம்: இனி ஒரு மாதம் மட்டுமே

பேங்காக்:

இன்று முதல், விசா இல்லாமல் தங்கக்கூடிய காலம் 60 நாள்களிலிருந்து 30 நாள்களாகக் குறைக்கப்படுகிறது.

மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 60 நாடுகள், வட்டாரங்களைச் சேர்ந்த பயணிகளுக்கு இந்த மாற்றம் பொருந்தும்.

தாய்லாந்து மின்னிலக்க வருகை அட்டை (Thailand Digital Arrival Card) நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

வெளிநாட்டுப் பயணிகள் அனைவரும் தாய்லாந்துக்குச் செல்வதற்கு முன் மின்னிலக்க வருகை அட்டையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

தாய்லாந்தின் பொருளியலுக்குச் சுற்றுலாமுக்கியமானது.

இருப்பினும், வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்த விசா விலக்கு விதிமுறை கட்டுப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset