செய்திகள் கலைகள்
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
கோலாலம்பூர்:
கதாநாயகன் மட்டுமே கதையை நகர்த்துவதில்லை. அவருக்கு எதிராக நிற்கும் வில்லன் கதாபாத்திரங்களும் கதையின் உயிரோட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
வழக்கமான தமிழ் சினிமாவைப் போல ‘நல்லவன்–கெட்டவன்’ என்ற ஒரே கோணத்தில் வில்லன்களை அணுகாமல், அவர்களின் பின்னணி, மனநிலை, செயல்படும் விதம் ஆகியவற்றையும் ரசிகர்கள் கவனிக்கும் வகையில் அவர் கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளார்.
காக்க காக்க திரைப்படத்தில் ஜீவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜீவன், தனது தோற்றம், உடல்மொழி, வசன உச்சரிப்பு ஆகியவற்றின் மூலம் மிரட்டலான எதிர்மறை கதாபாத்திரத்தை உருவாக்கினார்.
அதேபோல் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரங்கள் வெறும் கதாநாயகனை எதிர்க்கும் மனிதர்களாக மட்டும் இல்லாமல், படத்தின் மர்மத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்கும் முக்கியக் காரணிகளாக அமைந்தன.
GVM-ன் சிறப்பு என்னவென்றால், வில்லனை அறிமுகப்படுத்தும் விதமே ஒரு தனி சினிமா அனுபவமாக இருப்பது. அவர்களின் நடவடிக்கைகள், உரையாடல்கள், அமைதி, பார்வை என அனைத்திலும் ஒரு விதமான உளவியல் அழுத்தத்தை உருவாக்குவார்.
இதனால் வில்லன் திரையில் தோன்றும் ஒவ்வொரு தருணமும் கதையின் அடுத்த கட்டம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தும்.
மேலும், அவரது வில்லன்கள் கதாநாயகனின் திறமையை வெளிப்படுத்துவதற்கான கருவியாகவும் செயல்படுகின்றனர்.
கதாநாயகனுக்கு சவால் அதிகரிக்கும்போது, அவரது முடிவுகள், துணிச்சல், மன உறுதி ஆகியவை இன்னும் தெளிவாக வெளிப்படும். நாயகனின் உயரத்தை நிர்ணயிப்பதில் வில்லனின் வலிமையும் முக்கியம் என்ற திரைக்கதை அணுகுமுறை GVM படங்களில் தெளிவாகத் தெரியும்.
25 ஆண்டுகால கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்பயணத்தைப் பார்க்கும்போது, அவரது ஹீரோக்களைப் போலவே சில வில்லன் கதாபாத்திரங்களும் ரசிகர்களின் நினைவில் ஆழமாகப் பதிந்துள்ளன.
காதலையும் ஸ்டைலையும் மட்டுமல்லாமல், மிரட்டலையும் உளவியலையும் திரையில் தனக்கே உரிய பாணியில் பதிவு செய்த இயக்குநராகவும் GVM நினைவுகூரப்படுகிறார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
இசைஞானி இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சரிகமா இந்தியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
September 7, 2026, 9:47 pm
உலக அழகி போட்டி: மலேசிய தமிழ்ப் பெண் தனுசியாவுக்கு 3-ஆம் இடம்
September 6, 2026, 4:19 pm
‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டுக்கு பெருமை சேர்க்கும்”: சிலம்பரசன் நம்பிக்கை
September 5, 2026, 12:07 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: எப்போதும் ஸ்பெஷலான கோம்போ
September 5, 2026, 11:57 am
