நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் பொதுமன்னிப்பு மனு ஒத்திவைப்பு; ஹன்னா இயோவிடம் கேளுங்கள்: அஸாலினா

புத்ராஜெயா:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் பொதுமன்னிப்பு மனு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பான எந்தவொரு விளக்கங்களும் கேள்விகளும், பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோவிடம் கேட்கப்பட வேண்டும்.

பிரதமர் துறையின் சட்டம், நிறுவன சீர்திருத்தம் அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் இதனை கூறினார்.

நான் மன்னிப்பு வாரியத்திற்குத்தான் பொறுப்பான அமைச்சர் அல்ல.

மாறாகத் தனது அமைச்சின் கீழ் உள்ள சட்ட விவகாரப் பிரிவு ஒரு செயலகமாக மட்டுமே செயல்பட்டது என்று அவர் கூறினார்.

உண்மையில், சட்ட விவகாரப் பிரிவு வெளியிட்ட ஒரு அறிக்கையிலிருந்துதான் எனக்கு இந்தத் தகவல் கிடைத்தது.

நான் இதற்குப் பொறுப்பான அமைச்சர் அல்ல.

சட்ட விவகாரப் பிரிவு என் கீழ் இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்தின் மன்னிப்பு வாரியம் தொடர்பான விஷயத்தில், சட்ட விவகாரப் பிரிவு செயலகமாகச் செயல்படுகிறது.

ஆனால் அந்தந்த மாநிலத்தின் அமைச்சரும் முதலமைச்சரும்தான் மன்னிப்பு வாரியத்தில் நிர்வாகப் பிரதிநிதிகளாக உள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset