நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் பொதுமன்னிப்பு சட்டத்தின்படி பரிசீலிக்கப்பட்டது; பாரபட்சம், வெறுப்பின் அடிப்படையில் அல்ல: பிரதமர்

கோழிக்கோடு:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் பொதுமன்னிப்பு மனு மீதான ஒத்திவைப்பு, தேசியக் கொள்கைகள், சட்டம், அரசியலமைப்பு, அது தொடர்பான ஆலோசனைகளின் அடிப்படையில் செய்யப்பட்டது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

பொதுமன்னிப்பு வாரியக் கூட்டத்தில் தனது பங்களிப்பும் சட்டத்திற்கும் சட்டத்துறைத் தலைவருக்கும் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலுக்கும் உட்பட்டதே என்று அவர் கூறினார்.

இருப்பினும், பொதுமன்னிப்பு வாரியக் கூட்டத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின்  விருப்புரிமைக்கு உட்பட்டது.

நிச்சயமாக அவர் அனைத்துக் காரணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும் என்று இந்தியாவுக்கான தனது ஐந்து நாள் பணிப் பயணத்தை முடிப்பதற்கு முன்பு, இங்குள்ள கோழிக்கோட்டில் மலேசிய ஊடகங்களுடனான செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

நஜிப்பின் பொதுமன்னிப்பு விவகாரத்தைத் தனிப்பட்ட முறையில் பார்க்கக் கூடாது.

மாறாக சட்டத்தின் கோட்பாடுகள் மற்றும் நாட்டின் ஆளுகையின் அடிப்படையில் அதை மதிப்பிட வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset