நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ் இலக்கிய உலகில் கவிஞர் நா.முத்துக்குமாரின் பங்களிப்புகள் அளப்பரியது: டத்தோஶ்ரீ எம்.சரவணன் பெருமிதம் 

பத்து கேவ்ஸ்: 

2000ஆம் ஆண்டு தொடங்கி இறக்கும் வரை எண்ணற்ற கவிதைகளையும் தமிழ்த்திரையிசைப் பாடல்களையும், தமிழ் இலக்கியத்துக்கு வழங்கிச் சென்ற கவிஞர் நா.முத்துக்குமார் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் பெருமிதத்துடன் கூறினார். 

கவிஞர் நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் மனதை காதல் வயப்படவும் செய்யும் அதேவேளையில் காதல் தோல்விக்கு மருந்தாகவும் அமையும் என்று டத்தோஶ்ரீ சரவணன் தெரிவித்தார் 

'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' ந.முத்துகுமார் கருத்தும் கவியும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை பத்துகேவ்ஸ் ஷெங்கா மண்டபத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது 

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் சினேகன் அவர்கள் கலந்து கொண்டு கவிஞர் நா. முத்துக்குமாரின் அனுபவங்களையும் பாடல் வரிகளை பற்றி இனிமையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் 

நிகழ்ச்சியை அருள்குமார் தொகுத்து வழங்கவே நா. முத்துக்குமாரின் பாடல்களை நாட்டின் உள்ளூர் இசையமைப்பாளர் ஜே அவர்களின் இசைக்குழுவினர் பாடல்களைப் பாடி ரசிகர்களை இசையின் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினர் 

'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' ந.முத்துகுமார் கருத்தும் கவியும் நிகழ்ச்சிக்கு டத்தோஶ்ரீ எம்.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் மஹ்சா பல்கலைக்கழக தோற்றுநர் டான்ஶ்ரீ ஹனிஃபா, சைபர் ஜெயா பல்கலைக்கழக தோற்றுநர் டான்ஶ்ரீ பாலன், முன்னாள் செனட்டர் டி.மோகன் ஆகிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset