நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கணவனால் 13 முறை கத்தியால் குத்தப்பட்ட மனைவி உயிரிழந்தார்

கூலிம்:

கூலிம் ஹை-டெக், தாமான் டிராம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், நேற்று இரவு கணவனால் 13 முறை கத்தியால் குத்தப்பட்டதாக நம்பப்படும் சம்பவத்தில் மனைவி உயிரிழந்தார்.

கூலிம் மாவட்ட போலிஸ் தலைவர்,  ஷம்சுல் சின்ரிங் இதனை கூறினார்.

ஆரம்பகட்ட விசாரணையில், பொறாமையின் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

43 வயதான சந்தேக நபர் இரவு சுமார் 8.40 மணியளவில் லூனாஸ் போலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

தனது 39 வயதான மனைவியை வீட்டில் கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டார்.

மேலும் அந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு மடிக்கக்கூடிய கத்தியையும் ஒப்படைத்ததாக அவர் கூறினார்.

கூலிம் மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் மாவட்டக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களால், இரவு சுமார் 9 மணியளவில் லூனாஸ் போலிஸ் நிலையத்தில் அந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset