செய்திகள் மலேசியா
உயர் மதிப்புமிக்க துறைகளில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த மலேசியாவும் கேரளாவும் முயற்சி
கோழிக்கோடு:
வர்த்தகம், முதலீடு, வணிகக் கூட்டணிகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், இலக்கவியல் பொருளாதாரம், சுகாதாரம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட உயர் மதிப்புமிக்க துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த மலேசியாவும் கேரளாவும் முயற்சித்து வருகின்றன.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கேரள முதல்வர் வி.டி. சதீசனை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தபோது, மலேசியாவுக்கும் தென்னிந்திய மாநிலமான கேரளாவுக்கும் இடையிலான வணிக உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், வர்த்தகம், முதலீட்டுப் பரிமாற்றங்களை அதிகரிப்பது குறித்தும் விவாதித்தார்.
சுற்றுலா, வணிகம், மக்கள் பரிமாற்றங்களை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளையும் இந்தக் கலந்துரையாடல்கள் ஆராய்ந்தன.
மேலும், பரந்த பொருளாதார ஒத்துழைப்பிற்கு அரசாங்கத்திற்கும் தொழில்துறைக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் ஒரு சாத்தியமான யுக்கியாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக இலக்கவியல் பொருளாதாரம், சுகாதாரம் போன்ற உயர் மதிப்பு மற்றும் அறிவு செறிந்த துறைகளில் மலேசியாவும் கேரளாவும் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை அன்வர் எடுத்துரைத்தார்.
இத்துறைகளில் அரசு வலுவான திறன்களையும், கணிசமான எண்ணிக்கையிலான திறமையான நிபுணர்களையும் வளர்த்துள்ளது.
கல்வி, சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.
இதில், புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கவும், நடமாட்டத்தை அதிகரிக்கவும், மக்கள் உறவுகளை வலுப்படுத்தவும் உதவும் நெருங்கிய நிறுவன, தொழில்துறை இணைப்புகளும் அடங்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2026, 10:08 pm
குவாரி பாறையால் நசுக்கப்பட்ட லோரியில் சிக்கிய ஓட்டுநர் சிவக்குமார் மரணம்
September 14, 2026, 9:34 pm
அரசாங்கம் நிலையாக இருப்பதே முக்கியம் என்பதால் அம்னோ விவகாரத்தில் நான் மிதமான பாதையைத் தேர்ந்தெடுத்தேன்: பிரதமர்
September 14, 2026, 9:32 pm
ஆலய விவகாரங்களில் எழும் மிரட்டல், அழுத்தங்களுக்கு பேரா மாநில அரசு ஒருபோதும் அடிபணியாது: டத்தோ சிவநேசன்
September 14, 2026, 9:32 pm
சுங்கைசோ கம்போங் கொஸ்கான் சித்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா: அடுத்தாண்டு நடைபெறும்
September 14, 2026, 9:31 pm
ஹஜ் செலவைக் குறைக்க முயன்றேன்: ஜமீல் கிர்
September 14, 2026, 4:58 pm
மசூதியில் ஆறு வயது சிறாருக்குப் பாலியல் தொல்லை: மாற்றுத்திறனாளி நபர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
September 14, 2026, 4:27 pm
