நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கத்தோலிக்க சமூகத்தை இழிவாக பேசிய அம்னோ தலைவர்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் கோரிக்கை 

கோலாலம்பூர்: 

கத்தோலிக்க பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளைக் குறித்து இழிவாக பேசியதாக அம்னோ கட்சியைச் சேர்ந்த தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டின் ஒருமைப்பாட்டு அமைச்சர் ஏரன் அகோ டகாங் கோரிக்கை விடுத்தார். 

மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கில் பேசுதல் மற்றும் மதத்தின் அடிப்படையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ஆரோன் தெரிவித்தார்.

எந்தவொரு உவமையின் பின்னணியில் நோக்கம் இருந்தாலும், மத நிறுவனங்கள், மதகுருமார்கள், புனித நூல்கள் அல்லது நம்பிக்கைகளைக் குறிக்கும் நகைச்சுவைகளை எப்போதுமே செய்யக்கூடாது என்றும், இதனை ஒரு சிறிய விஷயமாகக் கருத முடியாது என்றும் அவர் கண்டிப்புடன் கூறினார்.

"மதம் என்பது ஒரு நகைச்சுவை அல்ல. ஒரு சமூகத்தால் புனிதமாகவும் மதிக்கப்படும் விஷயங்கள் எக்காரணம் கொண்டும் பாலியல் நோக்கம் கொண்ட நகைச்சுவைகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடாது" என்று அமைச்சர் ஏரன் அகோ டகாங் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset