செய்திகள் மலேசியா
குவாரி பாறையால் நசுக்கப்பட்ட லோரியில் சிக்கிய ஓட்டுநர் சிவக்குமார் மரணம்
சிம்பாங் பூலாய்:
கம்போங் கெபாயாங் அருகே ஒரு குவாரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, டிரெய்லர் லோரி பாறையால் நசுக்கப்பட்டதில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று மாலை 5.18 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தில், 53 வயதான சிவக்குமார் மருதமுத்து, டிரெய்லரின் முன்பகுதியில் சிக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரா மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாடுகள் பிரிவின் உதவி இயக்குநர் சபரோட்சி நூர் அஹ்மத்,
அழைப்பு வந்தவுடன் சிம்பாங் பூலாய் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழுவினர், கோப்பெங் தீயணைப்புப் படையின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூறினார்.
தீயணைப்புப் படையினர் மாலை 5.29 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து, உடனடியாக அங்கு ஒரு ஆரம்பகட்ட மதிப்பீட்டை மேற்கொண்டனர்.
பின்னர், அதிகாரிகள் ஹைட்ராலிக் உபகரணங்களைப் பயன்படுத்தி, சிக்கிக்கொண்டிருந்தவரை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.
சிக்கிக் கொண்ட சிறிது நேரத்திலேயே பாதிக்கப்பட்டவர் வெற்றிகரமாக மீட்கப்பட்டார்.
ஆனால் அவர் இறந்துவிட்டதை சுகாதார அமைச்சின் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.
பாதிக்கப்பட்டவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2026, 9:34 pm
அரசாங்கம் நிலையாக இருப்பதே முக்கியம் என்பதால் அம்னோ விவகாரத்தில் நான் மிதமான பாதையைத் தேர்ந்தெடுத்தேன்: பிரதமர்
September 14, 2026, 9:33 pm
உயர் மதிப்புமிக்க துறைகளில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த மலேசியாவும் கேரளாவும் முயற்சி
September 14, 2026, 9:32 pm
ஆலய விவகாரங்களில் எழும் மிரட்டல், அழுத்தங்களுக்கு பேரா மாநில அரசு ஒருபோதும் அடிபணியாது: டத்தோ சிவநேசன்
September 14, 2026, 9:32 pm
சுங்கைசோ கம்போங் கொஸ்கான் சித்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா: அடுத்தாண்டு நடைபெறும்
September 14, 2026, 9:31 pm
ஹஜ் செலவைக் குறைக்க முயன்றேன்: ஜமீல் கிர்
September 14, 2026, 4:58 pm
மசூதியில் ஆறு வயது சிறாருக்குப் பாலியல் தொல்லை: மாற்றுத்திறனாளி நபர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
September 14, 2026, 4:27 pm
