செய்திகள் கலைகள்
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
சென்னை:
பிக் பாஸ் சீசன் 10 தமிழில் நடிகரும் தொகுப்பாளருமான விஜய் சேதுபதி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார் என்று தகவல்கள் வெளியானது
இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் கேப்டன் ஷாதிகா தமது தலைமைப் தலைமைப் பொறுப்பை சரியாக செய்தாரா என்கிற கேள்வியை முன்வைத்தார் விஜய் சேதுபதி.
“வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுப்பது”, “பிரச்சினையும் பொறுப்பும் வந்ததும் எதிரணி மீது பழியைப் போடுவது”.
“அங்கிருந்து தெறித்து ஓடுவது லீடருக்கான குவாலிட்டி இல்லை” என்று விஜய் சேதுபதி பயன்படுத்திய வார்த்தைகள், முதல்வர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் வீட்டின் கேப்டனை நோக்கி விஜய் சேதுபதி கூறிய கருத்துகள், தற்போதைய அரசியல் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுவதால் இந்தப் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 4:45 pm
இசைஞானி இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சரிகமா இந்தியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
September 7, 2026, 9:47 pm
உலக அழகி போட்டி: மலேசிய தமிழ்ப் பெண் தனுசியாவுக்கு 3-ஆம் இடம்
September 6, 2026, 4:19 pm
‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டுக்கு பெருமை சேர்க்கும்”: சிலம்பரசன் நம்பிக்கை
September 5, 2026, 12:07 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: எப்போதும் ஸ்பெஷலான கோம்போ
September 5, 2026, 11:57 am
