நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியப் பனைக்குளம் ஜமாத்தின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியுடன் மீலாதுன் நபி விழா, இன்னிசைக் கச்சேரி

கோலாலம்பூர்:

நேற்று சனிக்கிழமை தலைநகர் டிபிகேஎல் கட்டடத்தின் 14ஆவது தளத்தில் மலேசியப் பனைக்குளம் ஜமாத்தின் குடும்பங்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியுடன் மீலாதுன் நபி விழாவும் இன்னிசைக் கச்சேரியும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் டத்தோ அன்வர் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக  மலேசிய ஐக்கிய ஜமாத்தின் தலைவர் டத்தோ டாக்டர் நூருல் அமீன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னதாக உத்தம திரு நபியின் உதய தின விழாவில் சிறப்பு சொற்பொழிவாளராக மௌலவி அப்துல் கய்யூம் உரை நிகழ்த்தினார்.

காலையில் திலாவா அல் குர்ஆன் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு டத்தோ அன்வர் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.

பிற்பகலில் பிரபலப் பாடகர் நெல்லை அபூபக்கர் தலைமையில் இஸ்லாமிய இன்னிசைக் கச்சேரி சிறப்பாக நடைபெற்றது. விஜய் டிவி சூப்பர் சிங்கர் பரிதாவும் உடன் பாடினார்.

இசைக் கச்சேரியின் துவக்கத்தில் வழக்கறிஞர் ஷாகுல் ஹமீது தனது பிரபல பாடலான கண்களில் மதீனா தெரிகிறது என்ற இறையருட் கவிஞர் சீனி நைனா முஹம்மதின் பாடல் வரிகளைப் பாடி துவக்கம் செய்தார்.

சமீபத்தில் பினாங்கு கவர்னரால் பிஜேஎம் பட்டம் வழங்கப்பட்ட முஹம்மது அஸ்மான், முஹம்மது இர்ஃபான், டாக்டர் அல் ஹஃபிஸ் ஃபைஸ் ஆகியோரும் பிஜேகே பட்டம் வழங்கப்பட்ட டாக்டர் செய்யது நிஜாம், புவான் ஜஹானாரா ஆகியோரும் டத்தோ பட்டம் பெற்ற முனவ்வர் சாதிக் அவர்களையும் ஜமாத்தின் சார்பாக சிறப்பு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியை அமீன் நெறிப்படுத்தினார். ஒருங்கிணைப்புப் பணிகளை ஜாஃபர் சாதிக் மேற்கொண்டார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset