செய்திகள் மலேசியா
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை வாங்குவது குறித்து மலேசியா ஆராய்ந்து வருவதை பிரதமர் அன்வார் உறுதிப்படுத்தினார்
புது டெல்லி:
இந்தியாவின் பிரம்மோஸ் வான்-தரை ஏவுகணை அமைப்பை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
மலேசிய விமானப்படையே முக்கிய முடிவெடுக்கும் அமைப்பாக இருப்பதால், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
இந்தப் பேச்சுவார்த்தைகள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்பின் ஒரு பகுதியாக நடைபெற்றன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பகமான உறவை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவின் மேம்பட்ட பாதுகாப்புத் திறன்களை அங்கீகரித்து, இந்த சாத்தியமான கொள்முதலுக்கு அன்வார் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
பிரம்மோஸ் ஏவுகணையானது, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (DRDO), ரஷ்யாவின் NPO மஷினோஸ்ட்ரோயேனியா ஆகியவற்றின் கூட்டு முயற்சித் தயாரிப்பாகும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2026, 7:46 pm
தங்க ரத ஊர்வலத்துடன் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது
September 13, 2026, 6:23 pm
இந்தோனேசியக் கடலில் காணாமல் போன கப்பலில் மலேசியர்கள் இருந்தனரா என்று விஸ்மா புத்ரா விசாரித்து வருகிறது
September 13, 2026, 3:35 pm
இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார் பிரதமர் அன்வார்
September 13, 2026, 2:52 pm
விமான மருத்துவர் சேவை ஒப்பந்தங்கள், ஹெலிகாப்டர் பயன்பாடு ஆகியவற்றை சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்கிறது
September 13, 2026, 2:51 pm
பேரா மாநிலப் பள்ளிகளுக்கு இடையிலான கபடி போட்டி: 42 குழுக்கள் பங்கேற்பு
September 13, 2026, 11:56 am
1 எம்டிபி சொத்துக்களை மீட்பதில் மலேசியா உறுதியாக உள்ளது: நிதியமைச்சு
September 13, 2026, 11:42 am
