செய்திகள் மலேசியா
போலிசார் மீது மோத முயன்ற காதல் ஜோடி கைது
கூலாய்:
போலிசார் மீது மோத முயன்ற காதலர்கள் கைது செய்யப்பட்டதாக கூலாய் போலிஸ் தலைவர் டான் செங் லீ கூறினார்.
கூலாய், பண்டார் புத்ரா, ஜாலான் கெனாரி பகுதியில் 23 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் போலிசார் மீது பெரோடுவா மைவி காரை மோதியதைத் தொடர்ந்து, போலிசார் அதன் டயர்களை நோக்கிச் சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதிகாலை சுமார் 1.20 மணியளவில், கூலாய் போலிஸ் தலைமையக மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவின் உறுப்பினர்கள் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் போலிஸ் அதிகாரிகள் ஒரு கருப்பு நிற பெரோடுவா மைவி காரை நிறுத்தி, சோதனையிட்டபோது காரில் உள்ளூர் ஆணும் பெண்ணும் இருந்ததைக் கண்டறிந்ததாக அவர் கூறினார்.
சோதனையின் போது, சந்தேக நபர் ஆக்ரோஷமாக நடந்துகொண்டு, ஒரு போலிசாரின் மோட்டார் சைக்கிள், ஒரு மஸ்டா சிஎக்ஸ்-5 மீது மோதியதோடு, ஒரு போலிஸ் அதிகாரி மீதும் மோத முயன்று தப்பிக்க முயன்றார்.
அதனைத் தொடர்ந்து, போலிஸ்அதிகாரி தற்காப்புக்காக சந்தேக நபரின் வாகன டயரில் ஒரு முறை சுட்டு, வாகனத்தை நிறுத்தினார்.
இருப்பினும், சந்தேக நபர் தப்பிவிட்டார் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
சந்தேக நபரின் மோட்டார் சைக்கிள் மோதியதில், போலிஸ் அதிகாரி ஒருவர் சிக்கிக்கொண்டு அவரது காலில் லேசான காயம் அடைந்ததாக டான் கூறினார்.
24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில், நேற்று இரவு 11.30 மணி முதல் 8.30 மணி வரை, கூலாய் குற்றப் புலனாய்வுப் பிரிவு, பண்டார் புத்ரா, கூலாய், குளுவாங் ஆகிய பகுதிகளைச் சுற்றி அந்தத் காதல் ஜோடியை கைது செய்ததாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2026, 11:56 am
1 எம்டிபி சொத்துக்களை மீட்பதில் மலேசியா உறுதியாக உள்ளது: நிதியமைச்சு
September 13, 2026, 11:16 am
பிரதமர் - விஜய் சந்திப்பு; கால அட்டவணை முரண்பாட்டை அரசியல் சர்ச்சையாக மாற்றக்கூடாது: மைக்கி
September 13, 2026, 10:36 am
மலேசியா-இந்தியா வர்த்தகத் தளத்தை ஒருங்கிணைக்க அமைச்சர் ரமணனுக்குப் பொறுப்பு: அன்வார், மோடி முடிவு
September 13, 2026, 10:32 am
பி40 மாணவர்களுக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்குவது குறித்து உயர்கல்வி அமைச்சு பரிசீலிக்க வேண்டும்: ஜாஹித்
September 13, 2026, 10:28 am
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பிரச்சினை தீர்க்கப்படும்: ஜாஹித்
September 13, 2026, 8:16 am
ரஷ்யாவுடன் நேரடி விமானச் சேவைகள், விசா இல்லாத பயணம்: புடினிடம் அன்வார் கோரிக்கை
September 12, 2026, 11:21 pm
