நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விமான மருத்துவர் சேவை ஒப்பந்தங்கள், ஹெலிகாப்டர் பயன்பாடு ஆகியவற்றை சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்கிறது

கோத்தாபாரு:

கடந்த செவ்வாய்க்கிழமை சரவாக்கின் லாங் லெல்லாங்கில் நடந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் பயன்பாடு உட்பட, விமான மருத்துவர் சேவைதொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் சுகாதார அமைச்சு மறுமதிப்பீடு செய்யும்.

இந்த விபத்தில் நான்கு சுகாதார அமைச்சு ஊழியர்களும் ஒரு விமானியும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சூல்கிப்ளி அஹ்மத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் மகாதிர் அப்துல் வஹாப் கூறினார்.

ஜார்ஜ் டவுனில் நடைபெற்ற 2026 மலேசிய விபத்து மாநாட்டைத் தொடங்கி வைத்த பிறகு, சுகாதார அமைச்சர் வெளியிட்ட செய்தியாளர் சந்திப்பில் நாங்கள் குறிப்பிட்டது போல, அது தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் நாங்கள் மறுமதிப்பீடு செய்வோம் என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு பயணத்திற்கும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் 30 ரிங்கிட் அலவன்சும் இந்த மறுஆய்வில் மறுமதிப்பீடு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

லாங் லெலாங் விபத்தில் சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருந்து வந்தது என்ற கூற்று குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர்,

இந்த விவகாரம் மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும், அது இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.


லாங் லெலாங்கில் ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து இம்மருத்துவ செயல்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பிறகு, உள்நாட்டுப் பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு சுகாதார சிகிச்சை சேவைகளைத் தொடர்வதற்காக, நான்கு அமலாக்க முகமைகளின் சொத்துக்களைப் பயன்படுத்தி உபசரிப்பு விமானங்களை இயக்குவது சுகாதார அமைச்சால் செயல்படுத்தப்பட்ட மாற்று வழிகளில் ஒன்றாகும் என்று அமைச்சர் சூல்கிப்ளி அஹ்மத் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset