செய்திகள் மலேசியா
1 எம்டிபி சொத்துக்களை மீட்பதில் மலேசியா உறுதியாக உள்ளது: நிதியமைச்சு
புத்ராஜெயா:
1 எம்டிபி ஊழல் தொடர்பான சொத்துக்களை மீட்பதற்கான தனது முயற்சிகளில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
இதில் பல நாடுகளில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளும் அடங்கும்.
நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கலைப்பாளரின் உதவியுடன் தற்போது கலைக்கப்படும் செயல்பாட்டில் உள்ள நான்கு நிறுவனங்கள், டிபிஎஸ் வங்கிக்கு எதிராக சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கைக் கவனத்தில் கொண்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
1 எம்டிபி, எஸ்ஆர்சி நிறுவனங்களிலிருந்து நிதிகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக, 4.2 பில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரப்பட்டுள்ளது.
1 எம்டிபி சொத்து மீட்புப் பணிக்குழுவின் கூற்றுப்படி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு நிறுவனங்களால் 2013ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட ஐந்து டிபிஎஸ் கணக்குகள் தொடர்பானவை இவை.
கணக்குத் தொடக்க ஆவணங்களில் டான் கிம் லூங் அல்லது எரிக் டான் உரிமையாளராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
2013, 2014-க்கு இடையில் 1 எம்டிபி, எஸ்ஆர்சி நிதிகளிலிருந்து முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையைத் திசைதிருப்புவதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஐந்து கணக்குகளின் ஒரே பயனாளியும் கையொப்பமிட்டவரும் இவரே.
இந்த மீட்பு முயற்சி என்பது இழந்த பணத்தை மீட்டெடுப்பது மட்டுமல்ல என்று பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த நாட்டின் இருண்ட அத்தியாயத்தில், மலேசியாவின் நிறுவனங்கள் மீதான நம்பிக்கையும், சர்வதேச கூட்டாளிகளின் பார்வையில் அதன் கண்ணியமும் கூட கேள்விக்குறியாகியுள்ளன என்று அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2026, 11:42 am
போலிசார் மீது மோத முயன்ற காதல் ஜோடி கைது
September 13, 2026, 11:16 am
பிரதமர் - விஜய் சந்திப்பு; கால அட்டவணை முரண்பாட்டை அரசியல் சர்ச்சையாக மாற்றக்கூடாது: மைக்கி
September 13, 2026, 10:36 am
மலேசியா-இந்தியா வர்த்தகத் தளத்தை ஒருங்கிணைக்க அமைச்சர் ரமணனுக்குப் பொறுப்பு: அன்வார், மோடி முடிவு
September 13, 2026, 10:32 am
பி40 மாணவர்களுக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்குவது குறித்து உயர்கல்வி அமைச்சு பரிசீலிக்க வேண்டும்: ஜாஹித்
September 13, 2026, 10:28 am
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பிரச்சினை தீர்க்கப்படும்: ஜாஹித்
September 13, 2026, 8:16 am
ரஷ்யாவுடன் நேரடி விமானச் சேவைகள், விசா இல்லாத பயணம்: புடினிடம் அன்வார் கோரிக்கை
September 12, 2026, 11:21 pm
