நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா மாநிலப் பள்ளிகளுக்கு இடையிலான கபடி போட்டி: 42 குழுக்கள் பங்கேற்பு

கோலகங்சார்:

பேரா மாநிலத்திலுள்ள இடைநிலைப் பள்ளி மாணவர்களின் கபடி விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் கபடி பயிலரங்கம், போட்டி நிகழ்ச்சி கோலகங்சாரில் சிறப்புடன் நடைபெற்றது.

பேரா மாநில இளைஞர் மேம்பாட்டு இயக்க ஏற்பாட்டில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது்

மாணவர்களிடையே விளையாட்டுத் திறன், ஒழுக்கம், குழு உணர்வு, தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதே அதன் நோக்கம் என்கிறார் அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சண்முகவேல் கூறினார்

நிகழ்ச்சியை ஒற்றுமகத் துறை அமைச்சரின் பத்திரிக்கை செயலாளர் டாக்டர் எஸ். சதேஷ் குமார் நிறைவு செய்து வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்


இந்நிகழ்ச்சி கோலாகங்சார் பேரா ஜூபிலி மண்டபத்தில் நடைபெற்றது இதனை கண்டு களிக்க பெரும் திரளான மக்கள் கலந்துக்கொண்டனர்.

பேராக் மாநிலத்தில் கபடி விளையாட்டை பள்ளி மாணவர்களிடையே மேலும் பிரபலப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கக்கூடிய திறமையான இளம் வீரர்களை உருவாக்குவதற்கும் இந்நிகழ்ச்சி பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இப் போட்டியில் 42 அணிகள் பங்கேற்றன். ஆண்கள் பிரிவில் 24, பெண்கள் பிரிவில் 18 அணிகள் களத்தில் இறங்கினர்.

இவ்வாண்டு 11ஆவது முறையாக சிறப்பாக நடைபெற்றது.

இடைநிலைப் பள்ளி மாணவர்களிடையே பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டியை அறிமுகப்படுத்தி, அவர்களிடையே இவ்விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும் என்று பேரா மாநில இளைஞர் மேம்பாட்டுத் தலைவருமான ஜி. சண்முகவேலு கூறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 33 அணிகள் பங்கேற்ற நிலையில், இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 42 ஆக அதிகரித்திருப்பது, மாணவர்களிடையே கபடி விளையாட்டின் மீதான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

போட்டி முடிவுகள்:

ஆண்கள் பிரிவு:
1. முதல் இடம் - SMK Katholik, Tanjung Malim
2. இரண்டாம் இடம் - SMK St Anthony, Teluk Intan
3. மூன்றாம் இடம் - SMK Pekan Baru
4. நான்காம் இடம் - SMK King Edward, Taiping

பெண்கள் பிரிவு:
1. முதல் இடம் - SMK Convent Teluk Intan A
2. இரண்டாம் இடம் - SMK Convent Teluk Intan B
3. மூன்றாம் இடம் - SMK Changkat Beruas
4. நான்காம் இடம் - SMK ACS Kampar

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset