நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ தனது வாக்குறுதிகளைக் காப்பாற்றுகிறது; ஆனால் இனி அதன் தேவை இல்லை என்றால், எங்களை வெளியேற்றுங்கள்: முஹம்மது ஹசான்

கோலாலம்பூர்:

அம்னோ ஒருபோதும் லஞ்சம் வாங்கியதில்லை அல்லது எந்தக் கட்சியிடமிருந்தும் சலுகைகளை எதிர்பார்த்ததில்லை.

மாறாக 16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள கட்சியை எழுப்பி வலுப்படுத்த மட்டுமே விரும்புகிறது என்று அம்னோவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹசான் கூறினார்.

நாட்டை நிர்வகிப்பதற்கும் அரசாங்க ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்து அமைக்கப்பட்ட ஒற்றுமை அரசாங்கத்தில் உம்னோவுக்கு இன்னும் ஒரு பங்கு உள்ளது.

அம்னோ ஒருபோதும் லஞ்சம் வாங்கியதில்லை அம்னோ ஒருபோதும் சலுகைகளை எதிர்பார்த்ததில்லை. 

அம்னோ மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதை எந்தக் கட்சியும் விரும்பவில்லை.

எனவே, நாம் வலிமையாக இருக்க வேண்டும். எழுந்து நின்று கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

அப்போதுதான் இறைவன் நாடினால் 16ஆவது தேர்தலை நம்மால் எதிர்கொள்ள முடியும்.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற, அம்னோ 2026 பொதுப் பேரவை முன்னிட்டு அம்னோ தலைவரின் நிறைவுரைக்குப் பிறகு சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

அம்னோ தனது வாக்குறுதிகளைக் காப்பாற்றுகிறது. ஆனால் இனி அதன் தேவை இல்லை என்றால், எங்களை வெளியேற்றுங்கள் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset