நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ தலைவர்களை அச்சுறுத்துவதற்காக ஒருமைப்பாட்டு அரசாங்கம் நீதிமன்ற நடவடிக்கைகளையும், அமலாக்க முகமைகளையும் பயன்படுத்தியதா?: ஃபஹ்மி மறுப்பு

கோலாலம்பூர்:

அம்னோ தலைவர்களை அச்சுறுத்துவதற்காக நீதிமன்ற நடவடிக்கைகளும் அமலாக்க முகமைகளும் பயன்படுத்தப்படுகின்றன என்று சில தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் நிராகரித்தார்.

ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் அவர்,

எந்தவொரு வழக்கின் விசாரணையையும் தொடங்குவதற்கோ அல்லது நிறுத்துவதற்கோ அமலாக்க முகமைகளின் விவகாரங்களில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் ஒற்றுமை அரசாங்க நிர்வாகமும் தலையிடாமல் மிகவும் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.

தாபோங் ஹாஜி, பெல்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு உதாரணங்களைக் கூறி, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அதை ஆணிவேர் வரை விசாரிக்க உத்தரவிட்டதாக அவர் கூறினார்.

அம்னோ தலைவர்களை அச்சுறுத்த நீதிமன்ற வழக்குகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது உண்மையல்ல.

அது பிரதமரோ அல்லது கட்சியோ கூறியது அல்ல. மாறாக அது மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவு.

அரசாங்கம் மாமன்னரின் உத்தரவை நிலைநிறுத்த வேண்டும் என்று இன்று நடைபெற்ற மீடியா பிரிமா மெர்டேக்கா ஓட்டப்போட்டியில் பங்கேற்ற பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset