செய்திகள் மலேசியா
மலேசியா-இந்தியா வர்த்தகத் தளத்தை ஒருங்கிணைக்க அமைச்சர் ரமணனுக்குப் பொறுப்பு: அன்வார், மோடி முடிவு
புதுடில்லி:
மலேசியா - இந்தியா இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இரு நாட்டு வர்த்தகச் சமூகங்களை நேரடியாக இணைக்கும் புதிய கூட்டாண்மைத் தளத்தை ஒருங்கிணைக்கும் முக்கியப் பொறுப்பை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனிடம் ஒப்படைக்க மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருமித்து முடிவு செய்துள்ளனர்.
18ஆவது பிரிக்ஸ் உச்ச நிலை மாநாட்டின் இடையே இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற உயர்மட்ட இருதரப்புச் சந்திப்பின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மலேசியத் தூதுக்குழுவில் முதலீட்டு, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனியோடு, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனும் பங்கேற்றார்.
இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக வலையமைப்புகளை விரிவாக்குவதோடு, புதிய முதலீட்டு வாய்ப்புகளைத் திறம்பட உருவாக்குவதே இக்கூட்டாண்மையின் முதன்மை நோக்கமாகும்.
இத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்று செயலாக்கும் பொறுப்பு அமைச்சர் ரமணனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இக்கூட்டாண்மை வெறும் ஏட்டளவில் இல்லாமல் மலேசிய மக்களுக்கு நேரடி நன்மைகளைத் தரும் வகையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்படும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இப்பொறுப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் ரமணன், பொருளாதார ராஜதந்திரத்தின் உண்மையான வெற்றி என்பது வெறும் முதலீட்டு எண்களில் மட்டுமல்லாமல், நாட்டிற்குள் தரமான வேலைவாய்ப்புகளையும் உயர்த்தப்பட்ட வருமானத்தையும் கொண்டு வருவதிலேயே அடங்கியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
இக்கூட்டாண்மை மூலம் நாட்டிற்குள் கொண்டுவரப்படும் ஒவ்வொரு முதலீடும் உள்ளூர் தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டிற்கும், உயர்மதிப்புமிக்கப் பணிகளுக்கும் வழிவகுப்பதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக, தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரம், செமிகண்டக்டர், தொழில்முறை சேவைகள் மற்றும் நவீன உற்பத்தித் துறை போன்ற உயர்மதிப்புமிக்கத் துறைகளில் இந்தியா கொண்டுள்ள உலகத்தரம் வாய்ந்த வலிமையைப் பயன்படுத்தி, மலேசியப் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புச் சந்தைக்கும் புதிய கதவுகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசியப் பொருளாதார வளர்ச்சியை மலேசியர்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கான வாய்ப்புகளாக மாற்றுவதே மனிதவள அமைச்சின் முதன்மை இலக்கு என்றும் அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2026, 11:16 am
பிரதமர் - விஜய் சந்திப்பு; கால அட்டவணை முரண்பாட்டை அரசியல் சர்ச்சையாக மாற்றக்கூடாது: மைக்கி
September 13, 2026, 10:32 am
பி40 மாணவர்களுக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்குவது குறித்து உயர்கல்வி அமைச்சு பரிசீலிக்க வேண்டும்: ஜாஹித்
September 13, 2026, 10:28 am
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பிரச்சினை தீர்க்கப்படும்: ஜாஹித்
September 13, 2026, 8:16 am
ரஷ்யாவுடன் நேரடி விமானச் சேவைகள், விசா இல்லாத பயணம்: புடினிடம் அன்வார் கோரிக்கை
September 12, 2026, 11:21 pm
உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? தைரியம் இருந்தால், அதை விரைவாகச் செய்யுங்கள்: ஜாஹித்
September 12, 2026, 11:20 pm
