நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பி40 மாணவர்களுக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்குவது குறித்து உயர்கல்வி அமைச்சு பரிசீலிக்க வேண்டும்: ஜாஹித்

கோலாலம்பூர்:

தங்கள் சொந்தப் ஊர்களுக்கு வெளியே கல்வி பயிலும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச விமானப் பயணச்சீட்டுகளை வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு, பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு உயர்கல்வி அமைச்சிடம் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கேட்டுக் கொண்டுள்ளார்.

அம்னோகட்சியின் தலைவராகவும் இருக்கும் அவர், இந்த விவகாரம் பரிசீலனைக்காக உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஸம்ப்ரி அப்துல் காதிரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், சபா, சரவாக்கில் கல்வி பயிலும் ஜொகூர், நெகிரி செம்பிலான் போன்ற அம்னோவைச் சேர்ந்த அனைத்து முதலமைச்சர்களுக்கும், மலாக்கா, பகாங், பேரா மந்திரி புசார்களும், அந்த மாநிலங்களைச் சேர்ந்த பி40 மாணவர்களுக்கு இலவச டிக்கெட்டுகளை வழங்குமாறு நான் அறிவுறுத்தியுள்ளேன்.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற 2026 அம்னோ பொதுப் பேரவையின்  நிறைவுரையை ஆற்றியபோது டத்தோஸ்ரீ ஜாஹித் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset