நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நித்திரை கதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

கோலாலம்பூர்:

மலேசிய இந்தியர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேலோங்க செய்ய நித்திரை கதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை PNM தேசிய நூலகத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் PERTAMA ஏற்பாட்டில் நித்திரை கதைகள் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.

மலேசியாவைச் சேர்ந்த ஆளுமைமிகு எழுத்தாளர்களின் படைப்புகளில் தயாரிக்கப்பட்ட இந்த தொகுப்பு நூல்கள் மொத்தம் 61 என்று அதன் திட்ட இயக்குநர் பார்த்திபன் இராமசந்திரன் கூறினார்.

வாசிக்கும் பழக்கத்தை இந்திய சமூகத்தில் தொடர்ந்து நிலைப்பெற செய்ய வேண்டும். இந்திய இளைஞர்கள் தேசிய நூலகத்தை முழுவதும் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென நித்திரை கதைகள்  தொகுப்பு நூலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் துணையமைச்சர் ஆர். யுனேஸ்வரன் கூறினார்.

நித்திரை கதைகள் தொகுப்பு நூலை வாசிக்கும் மாணவர்கள் அதிலுள்ள சிறந்த நன்னெறி அம்சங்களைப் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

முன்னதாக, சனிக்கிழமை தேசிய நூலகத்தின் அரங்கில் நடைபெற்ற இந்த நித்திரை கதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் சுமார் 200 பேர் வரை கலந்து கொண்டனர். 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset