நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரச மலேசிய காவல்படையின் புதிய துணைத்தலைவராக டத்தோஶ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் மஹித் நியமனம் 

கோலாலம்பூர்: 

அரச மலேசிய போலிஸ் படையின் புதிய துணைத்தலைவராக டத்தோஶ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் மஜித் நியமிக்கப்பட்டுள்ளது. 

டத்தோஶ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் மஜித் புக்கிட் அமான் மேலாண்மை இயக்குநராக பணியாற்றிருந்த வேளையில் இந்த புதிய பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டார். 

செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த முக்கியப் பதவி உயர்வை உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியது 

கடந்த ஜூலை மாதம் பணி ஓய்வு பெற்ற அயூப் கான் மைடின் பிச்சைக்குப் பதிலாக அப்துல் அஸிஸ் இந்த புதிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார் 


தற்போது 59 வயதாகும் அப்துல் அஜிஸ், கடந்த 2024-ஆம் ஆண்டில் புக்கிட் அமான் மேலாண்மை இயக்குநராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு சிறப்புப் பிரிவின் துணை இயக்குநராகப் பணியாற்றினார்.

அதற்கு முன்னர் அவர் பினாங்கு மாநிலத்தின் துணை காவல்துறைத் தலைவராகவும் மற்றும் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் துணை இயக்குநராகவும் கடமையாற்றியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் இத்தகைய அனுபவமிக்க தலைவர்களின் பங்கு மிக அவசியமானது என்று பல மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset