நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துணைப்பிரதமர் அஹ்மத் ஸாஹித் ஹமிடியின் சர்ச்சைக்குரிய கூற்று: நம்பிக்கை கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட பிரதமருக்கு அந்தோனி லோக் வேண்டுகோள்

கோலாலம்பூர்: 

ஒற்றுமை அரசாங்கத்தைப் பற்றி துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி சர்ச்சைக்குரிய கூற்றுகளை வெளியிட்டார் 

இந்நிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடியாக அவசர கூட்டத்தை கூட்டவேண்டுமென DAP கட்சியின் பொது செயலாளர் அந்தோனி லோக் கூறினார். 

. நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான சமீபத்திய அறிக்கைகளைத் தொடர்ந்து போக்குவரத்து அமைச்சரான அவர் இந்தத் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பிரதமர் அன்வார் குறித்து மறைமுகமாக டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி அம்னோ பொதுப்பேரவையில் கருத்து கூறியிருந்தார். 

ஒற்றுமை அரசாங்கத்தின் பங்காளிகள் ஒரே பாதையில் பயணிக்க வேண்டியது தற்போதைய அரசியல் சூழலுக்கு மிகவும் அவசியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

2022 தேர்தலுக்குப் பிறகு மாமன்னர் அறிவுறுத்தலின் பேரில் மலேசியாவில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டது. அதற்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமை தாங்கி வருகிறார் என்று அந்தோனி லோக் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset