செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் ஆட்சியாளராக துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் தொடர்ந்து நீடிப்பார்
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் ஆட்சியாளராக துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் தொடர்ந்து நீடிப்பார் என்று நீதி, சட்டம் பேரவை திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது.
எந்தவொரு சட்டப்பூர்வமான முறையும் பின்பற்றப்படாமல் அவரது பதவியில் மாற்றம் செய்யப்படவில்லை என்று பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியிடப்பட்ட அரசப் பிரகடனம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது மற்றும் செல்லாது என்ற தனது முந்தைய நிலைப்பாட்டை பேரவை மீண்டும் தீவிரமாக வலியுறுத்தியுள்ளது.
தவறான முறையில் தயாரிக்கப்பட்ட அந்தப் பிரகடனம் ஆரம்பம் முதலே சட்டத்திற்குப் புறம்பானதாகவும் குறையுடையதாகவும் உள்ளதாக பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான அனைத்துப் பிரகடனங்களும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2026, 4:58 pm
மசூதியில் ஆறு வயது சிறாருக்குப் பாலியல் தொல்லை: மாற்றுத்திறனாளி நபர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
September 14, 2026, 4:27 pm
பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: மனநலம் பாதிக்கபட்ட 15 வயது சிறுவன் விடுதலை
September 14, 2026, 1:28 pm
அரச மலேசிய காவல்படையின் புதிய துணைத்தலைவராக டத்தோஶ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் மஹித் நியமனம்
September 14, 2026, 1:15 pm
104 குடியேறிகளைக் கடத்திய நான்கு இந்தோனேசியா நாட்டவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது
September 14, 2026, 1:12 pm
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நித்திரை கதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
September 14, 2026, 12:10 pm
விஜய் உடனான சந்திப்பு இன்னும் திட்டமிடப்பட்டு வருகிறது: பிரதமர்
September 14, 2026, 11:53 am
