நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரவாங் வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா; 10 ஆண்டுகளுக்கு பின் இரத ஊர்வலம்: டத்தோஸ்ரீ பாலகிருஷ்ணன்

ரவாங்:

ரவாங் வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

ஆலயத்தின் தலைவர் டத்தோஸ்ரீ பாலகிருஷ்ணன் இதனை கூறினார்.

ரவாங் வட்டாரத்தில் பிரசித்திப் பெற்ற ஆலயமாக வீரகத்தி விநாயகர் ஆலயம் விளங்குகிறது.
இவ்வாலயத்தின் திருப்பணி முடிந்து ஆலயத்தின் கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.

அதன் தொடர்ந்து ஆலயத்தில் நடைபெறும் முதன் விநாயகர் சதுர்த்தி விழாவாக இது அமைந்துள்ளது.

அவ்வகையில் ஆலயத்தில் தொடர்ச்சியாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

ரவாங் சுற்றுவட்டார மக்கள் திரளாக வந்து இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இரத ஊர்வலம் இன்று இரவு மிகவும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.

கூட்டத்தை 10 ஆண்டுகளுக்கு பின் இரத ஊர்வலம் ரவாங் வட்டாரத்தில் நடைபெறவுள்ளது.

இதனால் ரவாங் வட்டார மக்கள் திரளாக வந்து இந்த இரத ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு டத்தோஸ்ரீ பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகமாக நகைகளை அணிய வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset