நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விஜய் உடனான சந்திப்பு இன்னும் திட்டமிடப்பட்டு வருகிறது: பிரதமர்

கோலாலம்பூர்:

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உடனான இருதரப்பு சந்திப்புக்கான திட்டங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளன.

இந்த சந்திப்பு புத்ராஜயாவிலோ அல்லது தமிழ்நாட்டின் சென்னையிலோ நடத்தப்படலாம் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மலேசியாவின் முன்மொழியப்பட்ட பயணத்திற்கு சென்னை பதிலளிக்கவில்லை என்ற யூகங்களையும் பிரதமர் நிராகரித்தார்.

தற்போது இந்தியாவில் இருக்கும் பிரதமர், 18ஆவது பிரிக்ஸ் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, முதலில் சென்னைக்கு பணி நிமித்தமாக வருகை தந்து, பின்னர் தென்னிந்தியாவின் மற்றொரு மாநிலமான கேரளாவிற்கு சென்றிருக்கிறார்.

இருப்பினும், சென்னை பயணம் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது.

தமிழக அரசு பதிலளிக்கவில்லை என்பது உண்மையல்ல. ஆரம்பத்திலிருந்தே, முதலமைச்சர் அலுவலகம், விஜய்க்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பணிகள் இருந்ததாலும், எனது புதுடில்லி, கேரளா, மாலத்தீவு பயணங்களுக்கு இடையில் எனக்குக் குறைந்த கால இடைவெளி மட்டுமே இருந்ததாலும், அவரது பயணத் திட்டத்தை ஒருங்கிணைக்க முயற்சிப்பதாகத் தெரிவித்திருந்தது.

இருப்பினும், அவர் பயணத் திட்டத்தை மாற்றியமைக்க முயன்றார்.

மேலும் அவருக்கு ஒரு முதலீட்டுப் பயணம், பிற நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டிருந்தன.

எனவே, இறுதியாக நான் அவரிடம், 'நான் நேராக கேரளா,  மாலத்தீவுக்குச் செல்கிறேன்.

தமிழ்நாட்டிற்கான பயணத்தைத் தொடர முடியாது என்று கூறினேன்.

எனவே, முந்தைய வாக்குறுதிகளைத் தொடர்ந்து இரு தரப்பினரும் தங்கள் பயணத் திட்டங்களை ஒருங்கிணைக்க முயற்சிப்பதாலும், இரு தரப்பினருக்கும் இடையிலான நல்லுறவு வலுவாக இருப்பதாலும் தான் உண்மை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset