செய்திகள் மலேசியா
104 குடியேறிகளைக் கடத்திய நான்கு இந்தோனேசியா நாட்டவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது
மஞ்சோங்:
கடந்த மாதம் சட்டவிரோதமாகக் குடியேறிகளைக் கடத்தியதாக இங்குள்ள மஞ்சோங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நான்கு இந்தோனேசியா நாட்டவர்கள் மீது இரண்டு வெவ்வேறு குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டது.
நீதிபதி அசிசா அகமது முன்னிலையில் வாசிக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகளைக் கேட்டறிந்த அனைத்து சந்தேக நபர்களும் புரிந்துகொண்டதாகத் தலை அசைத்தனர்.
கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி புலாவ் தாலாங்கில் 64 இந்தோனேசியக் குடியேறிகளைப் படகு ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர்கள் கூட்டாகச் கடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த முதல் வழக்கில் சிக்கியுள்ள மூன்று பேரும் முறையே படகு ஓட்டுநர் ஆதி வர்மன் மற்றும் உதவியாளர்கள் காடிங் மற்றும் ரஃபியர்நந்தா ஆவர்.
இதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கில், யுனுஸ் சபுத்ரா என்ற மற்றொரு படகு உதவியாளர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் 38 இந்தோனேசியர்கள் மற்றும் 2 வியட்நாமியர்கள் உள்பட மொத்தம் 40 குடியேறிகளைச் கடத்தியதாகக் கூறப்படுகின்றது.
குறிப்பிட்ட அதே தேதியில் காலை சுமார் 8 மணியளவில் மஞ்சோங்கில் உள்ள சுங்கை பத்து கடற்கைப் பகுதியில் இந்தச் சட்டவிரோதக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.
இந்தச் குற்றச்சாட்டு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் எதிரிகள் தரப்பிலிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் இவர்கமீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் வருவதால் பிணை வழங்க முடியாது எனத் துணைப் பொது வழக்கறிஞர் அனிசா பிசோல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணையையும் அதன் மறு வாசிப்பையும் அக்டோபர் 27-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2026, 4:58 pm
மசூதியில் ஆறு வயது சிறாருக்குப் பாலியல் தொல்லை: மாற்றுத்திறனாளி நபர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
September 14, 2026, 4:27 pm
பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: மனநலம் பாதிக்கபட்ட 15 வயது சிறுவன் விடுதலை
September 14, 2026, 4:24 pm
நெகிரி செம்பிலான் ஆட்சியாளராக துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் தொடர்ந்து நீடிப்பார்
September 14, 2026, 1:28 pm
அரச மலேசிய காவல்படையின் புதிய துணைத்தலைவராக டத்தோஶ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் மஹித் நியமனம்
September 14, 2026, 1:12 pm
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நித்திரை கதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
September 14, 2026, 12:10 pm
விஜய் உடனான சந்திப்பு இன்னும் திட்டமிடப்பட்டு வருகிறது: பிரதமர்
September 14, 2026, 11:53 am
