செய்திகள் மலேசியா
கட்டாயப்படுத்தி சத்தியப்பிரமாணத்தில் கையொப்பம்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரின் குற்றச்சாட்டு தொடர்பாக போலிஸ் விசாரணை
புத்ராஜெயா:
நெகிரி செம்பிலான் ஆட்சியாளரைக் கவிழ்க்கும் சத்தியப் பிரமாண ஆவணத்தில் கட்டாயப்படுத்தி கையெழுத்து போட்டதாக மந்திரி பெசார் இஸ்மாயில் கூறிய கூற்று தொடர்பாக போலிஸ் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது
உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இதனை உறுதிப்படுத்தினார்.
விசாரணை அறிக்கை திறக்கப்பட்டு, அதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டால், வழக்கம் போல் அதனை எங்கள் ஊடக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
செப்டம்பர் 8 அன்று காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்கு முன்பு அந்த ஆவணத்தில் கையெழுத்திடத் தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக இஸ்மாயில் முன்னர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் அம்னோ தலையிடாது என்றும் அம்னோ அரச கழகத்தை மதிப்பதாக அதன் தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2026, 4:58 pm
மசூதியில் ஆறு வயது சிறாருக்குப் பாலியல் தொல்லை: மாற்றுத்திறனாளி நபர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
September 14, 2026, 4:27 pm
பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: மனநலம் பாதிக்கபட்ட 15 வயது சிறுவன் விடுதலை
September 14, 2026, 4:24 pm
நெகிரி செம்பிலான் ஆட்சியாளராக துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் தொடர்ந்து நீடிப்பார்
September 14, 2026, 1:28 pm
அரச மலேசிய காவல்படையின் புதிய துணைத்தலைவராக டத்தோஶ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் மஹித் நியமனம்
September 14, 2026, 1:15 pm
104 குடியேறிகளைக் கடத்திய நான்கு இந்தோனேசியா நாட்டவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது
September 14, 2026, 1:12 pm
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நித்திரை கதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
September 14, 2026, 12:10 pm
விஜய் உடனான சந்திப்பு இன்னும் திட்டமிடப்பட்டு வருகிறது: பிரதமர்
September 14, 2026, 11:53 am
