செய்திகள் மலேசியா
பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: மனநலம் பாதிக்கபட்ட 15 வயது சிறுவன் விடுதலை
ஷா ஆலாம்:
பண்டார் உத்தாமாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் கடந்தாண்டு நிகழ்ந்த மாணவி கொலை சம்பவத்தில் சந்தேக நபரான 15 வயது சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது
இந்த நிலையில் சந்தேக நபரான 15 வயது சிறுவனை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது
அந்த சிறுவன் சிலாங்கூர் சுல்தானின் உத்தரவு கிடைக்கும் வரை உலு கிந்தா பாக்யா மருத்துவமனையில் தடுத்து வைக்கப்படுவான் என்று நீதிபதி அட்லின் அப்துல் மஜித் கூறினார்.
அங்கு அவனுக்குத் தேவையான தீவிர மனநல மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து, தடயவியல் மனநல நிபுணர் டாக்டர் இயன் லாய்ட் அந்தோனி நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
அந்த சிறுவன் தன் நிலை மறந்து எதையோ செவிமடுத்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவர் உறுதிப்படுத்தினார்.
சிறுவன் தரப்பில் முன்வைக்கப்பட்ட மருத்துவ சான்றுகளை ஏற்ற நீதிபதி அட்லின் அப்துல் மஜித் இந்த அதிரடி விடுதலையை வழங்கினார்.
எனினும், ஓர் உயிர் பறிபோனதை உணர்ந்து திருந்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அவனுக்கு அறிவுரை கூறியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2026, 4:58 pm
மசூதியில் ஆறு வயது சிறாருக்குப் பாலியல் தொல்லை: மாற்றுத்திறனாளி நபர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
September 14, 2026, 4:24 pm
நெகிரி செம்பிலான் ஆட்சியாளராக துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் தொடர்ந்து நீடிப்பார்
September 14, 2026, 1:28 pm
அரச மலேசிய காவல்படையின் புதிய துணைத்தலைவராக டத்தோஶ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் மஹித் நியமனம்
September 14, 2026, 1:15 pm
104 குடியேறிகளைக் கடத்திய நான்கு இந்தோனேசியா நாட்டவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது
September 14, 2026, 1:12 pm
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நித்திரை கதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
September 14, 2026, 12:10 pm
விஜய் உடனான சந்திப்பு இன்னும் திட்டமிடப்பட்டு வருகிறது: பிரதமர்
September 14, 2026, 11:53 am
