செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பிரச்சினை தீர்க்கப்படும்: ஜாஹித்
கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான பிரகடன ஆவணத்தில் கையெழுத்திட நெகிரி செம்பிலான் முதலமைச்சர் டத்தோ இஸ்மாயில் லாசிம் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினை தீர்க்கப்படும்.
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
இன்னும் பல பிரச்சினைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். இருப்பினும், அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படும்," என்று அவர் இன்று இங்குள்ள உலக வர்த்தக மையத்தில் 2026 அம்னோ பொதுப் பேரவைக்கு பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான பிரகடன ஆவணத்தில் கையெழுத்திட அவர் கட்டாயப்படுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டு குறித்து விளக்கம் பெறுவதற்காக, அஹ்மத் ஜாஹித் நேற்று இஸ்மாயிலுடன் ஒரு சந்திப்பை நடத்தியதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
செப்டம்பர் 9 அன்று, முந்தைய ஊடக அறிக்கை மூலம் வைரலான பிரகடன ஆவணம், தனது விருப்பத்திற்கு மாறாகவும், கட்டாயத்தின் பேரிலும் கையெழுத்திடப்பட்டதாக இஸ்மாயில் விளக்கினார்.
விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக, போலிசில் புகார் அளித்திருப்பதாகவும் அவர் அறிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2026, 11:16 am
பிரதமர் - விஜய் சந்திப்பு; கால அட்டவணை முரண்பாட்டை அரசியல் சர்ச்சையாக மாற்றக்கூடாது: மைக்கி
September 13, 2026, 10:36 am
மலேசியா-இந்தியா வர்த்தகத் தளத்தை ஒருங்கிணைக்க அமைச்சர் ரமணனுக்குப் பொறுப்பு: அன்வார், மோடி முடிவு
September 13, 2026, 10:32 am
பி40 மாணவர்களுக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்குவது குறித்து உயர்கல்வி அமைச்சு பரிசீலிக்க வேண்டும்: ஜாஹித்
September 13, 2026, 8:16 am
ரஷ்யாவுடன் நேரடி விமானச் சேவைகள், விசா இல்லாத பயணம்: புடினிடம் அன்வார் கோரிக்கை
September 12, 2026, 11:21 pm
உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? தைரியம் இருந்தால், அதை விரைவாகச் செய்யுங்கள்: ஜாஹித்
September 12, 2026, 11:20 pm
