நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? தைரியம் இருந்தால், அதை விரைவாகச் செய்யுங்கள்: ஜாஹித்

கோலாலம்பூர்:

16ஆவது பொதுத் தேர்தல் மூலம் தனது மக்கள் ஆணையை மீண்டும் பெற வேண்டும் அல்லது கட்சியை அதிகாரப்பூர்வமாக நீக்க வேண்டும் என ஒற்றுமை அரசாங்கத்திற்கு அம்னோ இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அம்னோ இனி ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது என்ற வலியுறுத்தலைக் கருத்தில் கொண்ட பின்னரே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து கட்சியை நீக்குவதற்கான முயற்சிகள், மக்களவையில் தாக்கல் செய்யப்பட வேண்டிய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? தைரியம் இருந்தால், அதை விரைவாகச் செய்யுங்கள்.

ஒற்றுமை அரசாங்கத்தின் அமைப்பிற்கான அடிப்படை, நம்பிக்கை கூட்டணியில் இருந்து 82 நாடாளுமன்ற உறுப்பினர்கள், எங்களிடம் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள  உள்ளனர்.

அடிப்படையில் 112 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை.

இருப்பினும், இந்த 112 நாடாளுமன்ற உறுப்பினர்களில் கெடிலான் கட்சியைச் சேர்ந்த டத்தோஸ்ரீ ரபிஸி ராம்லி, நிக் நஸ்மி நிக் அஹ்மத், வோங் சென் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே விலகிவிட்டனர்.

நாட்டின் நம்பிக்கையின் அடிப்படையிலும், மாமன்னரின் உத்தரவுகளுக்கு இணங்கவும் ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கான நமது ஒத்துழைப்பை நினைவில் கொள்ளுங்கள்.

2026 அம்னோ பொதுப் பேரவையை ஒத்திவைத்து ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset