நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ராஜதந்திரமாக நடந்துகொள்வது எப்படி என்பதை மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்: ஜாஹிட்டிற்கு அன்வார் பதில்

புது டில்லி:

ராஜதந்திரமாக நடந்துகொள்வது எப்படி என்பதை மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

18ஆவது பிரிக்ஸ் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்தடைந்த தனது துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் கிண்டலுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பதிலளித்தார்.

சமூக ஊடகத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், பிரதமர் தன்னை ஒரு 'ஆசிரியர்' என்று குறிப்பிட்டிருந்தார். 

இது, நேற்று அம்னோ பொதுப் பேரவையில் அஹ்மத் ஜாஹித் கூறிய கிண்டலைக் குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது.

அல்ஹம்துலில்லாஹ், 18ஆவது பிரிக்ஸ் தலைவர்கள் மாநாட்டில் நாட்டின் பெயரை உலக அரங்கிற்கு கொண்டு செல்வதற்காக, அந்த ஆசிரியர் இந்தியாவின் புது தில்லிக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தார்.

இந்த நாட்டின் ராஜதந்திரப் பணி அதன் இலக்கை அடைய பிரார்த்தனை செய்யுங்கள். 

ராஜதந்திரமாக நடந்துகொள்வது எப்படி என்பதை மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்று மடானி மொழி பெயர்த்திருந்தார். 

"ஸ்லேய்," என்று அவர் 'த்ரெட்ஸ்' தளத்தில் பதிவிட்டிருந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset