செய்திகள் மலேசியா
ஆலயங்களில் எழும் பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வுக் காண வேண்டும்: டத்தோ சிவக்குமார்
அலோர்காஜா:
ஆலயங்களில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண அனைவரும் கூட்டாக இணைய வேண்டும்.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
மலாக்கா, அலோர் காஜாவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பாலசுப்பிரமணியம் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டேன்.
ஆலய தலைவர், நிர்வாகக் குழுவினரின் அன்பான அழைப்பை ஏற்று இந்த பூஜையில் கலந்து கொண்டேன்.
இந்து ஆலயங்களுக்கு இடையே ஒற்றுமை, ஒத்துழைப்பு, பரஸ்பர ஆதரவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை டத்தோ சிவக்குமார் தமது உரையில் வலியுறுத்தினார்.
சிறிய ஆலயங்கள் பெரிய, நன்கு நிறுவப்பட்ட ஆலயங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், கூட்டு வளர்ச்சி, வழிகாட்டுதல் மற்றும் வளங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
ஒன்றிணைந்த ஒரு இந்து சமூகமாகச் செயல்படுவதன் மூலம், அனைத்து அளவிலான ஆலயங்களும் தற்போது எழும் சவால்கள், பிரச்சினைகளுக்குக் கூட்டாகத் தீர்வு காண முடியும்.
அதே வேளையில் வருங்கால சந்ததியினருக்காக நமது சமய நிறுவனங்களைப் பாதுகாத்து வலுப்படுத்த முடியும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 9:17 pm
நஜிப்பின் பொதுமன்னிப்பு: அனைவரும் அமைதி காக்குமாறு அம்னோ வலியுறுத்தியது
September 11, 2026, 9:15 pm
மூவார் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் சிகரத்தை நோக்கி நிகழ்வில் எஸ்டிபிஎம் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்
September 11, 2026, 3:51 pm
சிலாங்கூர் சுல்தானின் 25 ஆண்டு ஆட்சிக் கால வெள்ளி விழா: சிலாங்கூரில் அக்டோபர் 25ஆம் தேதி பொது விடுமுறை
September 11, 2026, 3:32 pm
