நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவும் ரஷ்யாவும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துகின்றன: விளேடிமீர் புதினை சந்தித்தார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 

புதுடில்லி: 

நாட்டின் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், ரஷ்யா நாட்டு அதிபர் விளேடிமீர் புதினை சந்தித்து கலந்துரையாடினார். 

இரு தலைவர்களின் சந்திப்பானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது 

இந்தச் சந்திப்பு BRICS உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடந்து, பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் வெற்றிகரமாக அமைந்தது.

இரு தலைவர்களும் எரிசக்தி, விமானப் போக்குவரத்து, எண்ணெய் பனை மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விவாதித்தனர்.

மலேசியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து வளர்ந்து நிலையான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.

குறிப்பாக, மின்னணுப் பொருட்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் பரிமாற்றம் இரு நாடுகளின் பொருளாதார உறவை மேலும் பலப்படுத்துகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset