செய்திகள் மலேசியா
சரவாக்கில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் DNA முடிவுகள் கிடைக்கப்பெற்றன: உடல்கள் என்று ஒப்படைக்கப்படும்
மீரி:
சரவாக் மாநிலத்தில் மருத்துவ பணியாளர்களை உட்படுத்திய ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் DNA முடிவுகள் கிடைக்கப்பெற்றுவிட்டன.
இதன் காரணமாக பலியானவர்களின் உடல்கள் வழங்கும் நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்படும் என்று சரவாக் மாநில போலிஸ் தலைவர் டத்தோ முஹம்மத் சைனால் அப்துல்லா கூறினார்.
ஆவணங்கள் சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு அவரவர்களின் உறவினர்களுக்கு உடல்கள் ஒப்படைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்கிழமை நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணம் செய்த ஐவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிற்பகல் சுமார் 3.40 மணியளவில் லாங் லெல்லாங் STOLport விமான நிலையத்தின் ஓடுபாதையின் இறுதிப் பகுதிக்கு அருகில் விமானம் விபத்துக்குள்ளானது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2026, 11:18 am
ஜாவா கடலில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; மலேசியாவிற்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை
September 12, 2026, 11:01 am
சரவாக் மாநிலத்தில் மோசமடையும் புகைமூட்டம்: காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 12, 2026, 10:31 am
மெனோரா சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு: நிலைமையைக் கண்காணிக்கிறது PLUS நிறுவனம்
September 12, 2026, 7:12 am
200,000 க்கும் மேல் போலி கொள்முதல் மோசடிகள்: கோலாலம்பூர் சுற்றுச்சூழல் துறை (DOE) எச்சரிக்கை
September 11, 2026, 9:17 pm
நஜிப்பின் பொதுமன்னிப்பு: அனைவரும் அமைதி காக்குமாறு அம்னோ வலியுறுத்தியது
September 11, 2026, 9:16 pm
ஆலயங்களில் எழும் பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வுக் காண வேண்டும்: டத்தோ சிவக்குமார்
September 11, 2026, 9:15 pm
