செய்திகள் மலேசியா
நஜிப்பின் பொதுமன்னிப்பு: அனைவரும் அமைதி காக்குமாறு அம்னோ வலியுறுத்தியது
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் பொதுமன்னிப்பு மனு செயல்முறையைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல், அனைவரும் அமைதி காக்குமாறு அம்னோ அழைப்பு விடுத்தது.
நஜிப்பின் பொதுமன்னிப்பு மனுவை அடுத்த பொதுமன்னிப்பு வாரியக் கூட்டத்திற்கு ஒத்திவைக்கும் முடிவைத் தொடர்ந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அம்னோ பொதுச் செயலாளர் அஷ்ராஃப் வஜ்தி டுசுகி கூறினார்.
இந்த விவகாரத்தில் முன்னேற்றங்களுக்காக நீண்டகாலமாகக் காத்திருக்கும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களின் கவலையையும் ஏமாற்றத்தையும் அம்னோ புரிந்து கொள்கிறது.
இருப்பினும், அனைத்துக் கட்சிகளும் அமைதியாக இருக்குமாறும், மலாய் ஆட்சியாளர்களின் அமைப்பை மதிக்குமாறும், நடைபெற்று வரும் செயல்முறையைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு செயலையும் செய்ய வேண்டாம் என்றும் அம்னோ அழைப்பு விடுக்கிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 9:16 pm
ஆலயங்களில் எழும் பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வுக் காண வேண்டும்: டத்தோ சிவக்குமார்
September 11, 2026, 9:15 pm
மூவார் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் சிகரத்தை நோக்கி நிகழ்வில் எஸ்டிபிஎம் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்
September 11, 2026, 3:51 pm
சிலாங்கூர் சுல்தானின் 25 ஆண்டு ஆட்சிக் கால வெள்ளி விழா: சிலாங்கூரில் அக்டோபர் 25ஆம் தேதி பொது விடுமுறை
September 11, 2026, 3:32 pm
