நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் அன்வார் நிர்வாகத்தை விமர்சிப்பது அம்னோவின் தோல்வியையே குறிக்கிறது: அமானா கட்சி சாடல் 

கோலாலம்பூர்: 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு பகுதியாக அம்னோ   இருப்பதால், பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தலைமையை விமர்சிப்பது அந்த கட்சியும் தோல்வி அடைந்ததையே காட்டுகிறது என்று அமனா கட்சியின் பொதுச் செயலாளர் ஃபைஸ் ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அம்னோ பொதுப் பேரவையில் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மத் ஸாஹித் ஹமிடியின் கருத்துகள் நிர்வாகத்திற்கு உதவத் தவறியதையே வெளிப்படுத்துகின்றன என்றார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் ஊழல் தடுப்பு குறியீடு ஆகியவை முந்தைய அரசாங்களை விட தற்போதைய ஆட்சியின் கீழ் மேம்பட்டுள்ளதாக அவர் விளக்கினார். 

அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் அம்னோ தலைவர்கள் தொடர்ந்து அறிக்கைகள் வெளியிடக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset