நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூவார் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் சிகரத்தை நோக்கி நிகழ்வில் எஸ்டிபிஎம் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்

மூவார்:

ஸ்ரீ முருகன் நிலையம் குறிப்பாக மூவார் ஸ்ரீ முருகன் நிலையம் கடந்த 35 ஆண்டுகளாக, எண்ணற்ற எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு வழிகாட்டி அவர்களின் உயர்கல்விக் கனவுகளை நனவாக்கும் பயணத்தில் துணையாக இருந்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டும் சுமார் 40 மாணவர்கள் தங்களது கனவுகளை நோக்கிய பொதுப் பல்கலைக்கழகங்களில் காலடி எடுத்து வைக்கத் தயாராக உள்ளனர்.

இச்சாதனையை பாராட்டும் விதமாக, முவார் ஸ்ரீ முருகன் நிலையம் “சிகரத்தை நோக்கி” எனும் சிறப்பு பாராட்டு நிகழ்ச்சியை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்தது.

பொதுப் பல்கலைக்கழகத்தில் இடம் பெறுவதற்கான சிறந்த பாதைகளில் எஸ்டிபிஎம் கல்வியும் ஒன்றாகும் என்பதை இந்த மாணவர்கள் தங்களது சாதனையின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

ஒரு மாணவரின் வெற்றியை அவரது தொடக்க நிலை தீர்மானிப்பதில்லை.

அவர் கொண்டிருக்கும் கனவு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பே அவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது என ஒவ்வொரு மாணவர்களும் பகிர்ந்துக் கொண்டரனர்.

சில நேரங்களில் பயணம் கடினமாக இருக்கலாம். சில நேரங்களில் தோல்விகளும் ஏமாற்றங்களும் வரலாம். ஆனால் நினைவில் கொள்ளுங்கள்:

“தோல்வி என்பது உங்கள் பயணத்தின் முடிவு அல்ல; அது உங்கள் வெற்றிக்கான அடுத்த படியாகும்.”

வெற்றியாளர்கள் ஒருபோதும் தோல்வியைச் சந்திக்காதவர்கள் அல்ல. தோல்விக்குப் பிறகும் எழுந்து நின்று தொடர்ந்து போராடுபவர்களே உண்மையான வெற்றியாளர்கள்.

ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்களை நீங்களே நம்புங்கள். இன்று நீங்கள் எடுக்கும் ஒரு சிறிய முயற்சியே நாளை உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய மிகப்பெரிய சாதனையாக மாறலாம் என ஸ்ரீ முருகன் நிலையம் துணை இயக்குநரும் ஜொகூர் மாநில ஒருக்கிணைப்பாளரான சுப்பிரமணியம்  தமது உரையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset