நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் சுல்தானின் 25 ஆண்டு ஆட்சிக் கால வெள்ளி விழா: சிலாங்கூரில் அக்டோபர் 25ஆம் தேதி பொது விடுமுறை 

ஷா ஆலாம்: 

சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்சியாளர், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் 25 ஆண்டு ஆட்சி கால வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் சிலாங்கூரில் எதிர்வரும் அக்டோபர் 25ஆம் தேதி பொது விடுமுறையாக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இந்த விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வருவதால், மறுநாளான அக்டோபர் 26-ஆம் தேதி திங்கட்கிழமை மாற்றுப் பொது விடுமுறையாகப் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநில செயலாளர் டத்தோ டாக்டர் அஹ்மத் ஃபட்சில் செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்தார். 

இந்த வெள்ளி விழா கொண்டாட்டமானது செப்டம்பர் 28 முதல் நவம்பர் 1 வரை சுமார் 20 முக்கிய நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.

மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் சிலாங்கூரில் தங்கள் சேவைகளின் போது இந்த விடுமுறையைப் பெறுவர்.

தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் வணிகத் தேவைகளையும் செயல்பாட்டுத் தொடர்ச்சியையும் கருத்திற்கொண்டு ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க ஊக்குவிக்கப்படுகின்றன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset