செய்திகள் மலேசியா
லெங்கோங் தங்கும் விடுதிப் பள்ளியில் 169 பேருக்கு உடல்நலக்குறைவு: உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன: டத்தோ சிவநேசன்
தைப்பிங்:
லெங்கோங் தங்கும் விடுதிப் பள்ளியில் செப்டம்பர் 9ஆம் தேதி இரவு உணவு உட்கொண்ட பின்னர், 12 முதல் 52 வயதுக்குட்பட்ட 169 பேர் வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளானதாக பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லெங்கோங் கிளினிக்கில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், அவர்களில் எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படவில்லை.
உணவு விஷமடைந்ததற்கான காரணத்தை உறுதி செய்வதற்காக, பள்ளியில் வழங்கப்பட்ட உணவின் மாதிரிகள், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
தைப்பிங் மருத்துவமனைக்கு வருகை தந்து அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ சிவநேசன், ஆய்வு முடிவுகள் கிடைத்த பின்னரே பாதிப்புக்கு காரணமான பாக்டீரியா அல்லது கிருமி குறித்து உறுதியாகக் கூற முடியும் என்றார்.
இதனிடையே, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பள்ளி கேன்டீனை நான்கு நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நான்கு நாட்களுக்குப் பின்னர் சுகாதார அதிகாரிகள் பள்ளி கேன்டீனுக்குச் சென்று அங்குள்ள தூய்மை மற்றும் சுகாதார நிலைமைகளை முழுமையாக ஆய்வு செய்வார்கள்.
அந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையிலேயே சிற்றுண்டி சாலையை மீண்டும் செயல்பட அனுமதிப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என டத்தோ சிவநேசன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:51 pm
சிலாங்கூர் சுல்தானின் 25 ஆண்டு ஆட்சிக் கால வெள்ளி விழா: சிலாங்கூரில் அக்டோபர் 25ஆம் தேதி பொது விடுமுறை
September 11, 2026, 3:32 pm
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம்; தனியார் துறை பணியாளர்களுக்கும் கடனுதவிகளை வழங்குகிறது: டத்தோ இப்ராஹிம் ஷா
September 11, 2026, 2:09 pm
போதும் ஆசிரியரே: அன்வாரைச் சாடிய ஜாஹித் அம்னோவால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றார்
September 11, 2026, 2:08 pm
